முதல் பட வாய்ப்பு.. அப்பா முன்னாடியே அதைபண்ண சொன்னாங்க.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!

மகாராஷ்டிராவில் பிறந்த வளர்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி நடிக்க ஆரம்பித்தார்.

2004 ஆம் ஆண்டு இவரது சினிமா பயணம் ஆரம்பித்தது . முதல் முதலில் ஹோ கயா நா படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

நடிகை காஜல் அகர்வால்:

அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பழனி திரைப்படத்தின் மூலமாக தமிழில் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

இப்படி அடுத்தடுத்த மொழி திரைப்படங்களில் தனது அறிமுகத்தை கொடுத்து வந்தார் காஜல் அகர்வால். முதன் முதலில் அவன் அடித்த படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

இருந்தாலும் முயற்சி கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே இருந்தார்.

முதல் வெற்றி திரைப்படம்:

2009 இல் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்த திரைப்படம் ” மகதீரா” இப்படம் காஜல் அகர்வாலுக்கு மிகப்பெரிய பெயரும் அடையாளத்தையும் கொடுத்தது.

அதுதான் காஜல் அகர்வாலின் திரைவாழ்க்கையில் டர்னிங் பாயிண்டாக அமைந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த வந்தார்.

காஜல் அகர்வால் தமிழில் சூர்யா, விஜய் ,அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இங்கு நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டார்.

தமிழில் நான் மகான் அல்ல, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் அழகுராஜா, மாரி , விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

இங்கு பிரபலமான நடிகையாக பெயர் எடுத்தார். மேலும் தெலுங்கிலும் அவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அங்கும் மார்க்கெட் பிடித்து வைத்திருந்தார்.

தென்னிந்திய நட்சத்திர நடிகை:

பின்னர் ஹிந்தி பக்கமே போக முடியாத அளவுக்கு இங்கேயே பிஸி ஆகிவிட்டார். அங்கிருந்து பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

திரைப்படத்துறையில் நடிகை ஆவதற்கு முன்னர் காஜல் அகர்வால் பல்வேறு விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் தான் திரைப்பட வாழ்க்கை திரைப்பட வாழ்க்கை பெற்றார்.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென கடந்து 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். திருமணமாகி குழந்தை பிறப்புக்கு பிறகும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார் காஜல் அகர்வால்.

தற்போது அவர் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இப்படியான நேரத்தில் சமீபத்திய பேட்டி ஒரு தனது முதல் படத்தை குறித்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அப்பா இருக்கும்போதே அப்படி நடந்துக்கொண்ட இயக்குனர்:

அதாவது நான் முதன்முதலில் தெலுங்கு திரைப்படத்தின் இயக்குனரான தேஜா இயக்கத்தில் லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தேன்.

அந்த படத்தில் நடிக்க வரும்போது எனக்கு சுத்தமாக தெலுங்கே தெரியாது. அதனால் எப்படி நடிக்கப் போகிறோம் என்ற ஒரு பதற்றத்திலே என்ன சொல்வார்களோ என்ற ஒரு பயத்திலே ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து அமர்ந்து கொண்டிருந்தேன்.

அப்போது என்னுடைய அப்பாவும் என்னுடன் வந்திருந்தார். அந்த நேரத்தில் இயக்குனர் என் அருகில் வந்து திடீரென அழுது காட்டுங்கள் என்று சொன்னார்.

உடனே எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த நேரத்தில் என்னுடைய அப்பா ஒரு வார்த்தை சொன்னார்.

அதைக் கேட்ட உடனே எனக்கு அழகு தானாக தார தாரையாக வந்துவிட்டது. உடனே அதை பார்த்த இயக்குனர் நீ ரொம்ப அழகா நடிக்கிற நல்லா அழுதீங்க என்று கூறிய என்னை பாராட்டினார். அப்படித்தான் எனக்கு முதல் பட வாய்ப்பு அவர் கொடுத்தார் என காஜல் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version