நீச்சல் உடையில் நடிகை காஜல் அகர்வால்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்தார் அம்மணி. ஆனால், சில எதிர்பாராத சம்பவங்கள் இந்த படத்தை பாதியிலேயே நிறுத்தியது.

பிறகு படம் எப்போது தொடங்கும் என்ற எந்த ஒரு தகவலும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட இந்த திரைப்படம் தற்போது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய வேகத்துடன் தொடங்கி இருக்கிறது.

எனவே இந்த படத்தில் தன்னுடைய எஞ்சியிருக்கும் பகுதிகளை நடித்து முடிக்க நடிகை காஜல் அகர்வால் ஆர்வம் காட்டி வருகிறார். மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு என 3 படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவலும் வந்திருக்கின்றது.

எனவே நடிகை காஜல்அகர்வால் தொடர்ந்து சினிமாவில் பயணிப்பார் என்றே தெரிகிறது. குழந்தை பிறந்த பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாதிரி இருக்கும் நடிகை காஜல்அகர்வால் நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …