ஒரு போன் கால் வந்துச்சு.. படுக்கைக்கு அழைத்தார்.. பிரபலம் குறித்து காஜல் பசுபதி பகீர்..!

சினிமாவில் பல காலங்களாக துணை கதாபாத்திரமாக நடித்து வரும் நடிகையாக காஜல் பசுபதி இருந்து வருகிறார். சின்னத்திரையில்தான் இவர் முதன் முதலில் அறிமுகமானதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார் .

தனியார் சேனல் ஒன்றில் முதன்முதலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் காஜல் அசுபதி. அங்கு அவருக்கு கிடைத்த பிரபலத்தை அடுத்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து கோ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் காஜல்.

சின்னத்திரை மூலம் கிடைத்த பிரபலம்:

சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரைத்திலும் நடித்திருக்கிறார் அதனால் தமிழ் சினிமாவில் அதிக பிரபலமானார் காஜல் பசுபதி. இந்த நிலையில் பிரபல நடன கலைஞரான சாண்டியை காதலித்து வந்தார் காஜல்.

ஆனால் இவர்களில் இவர்களுக்கு இடையேயான காதல் தொடர்ந்து செல்லவில்லை. இடையிலேயே அது முறிந்து விட்டது. இதனை தொடர்ந்து சில காலங்கள் தனிமையில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு வேறு ஒரு நபருடன் லிவிங் வாழ்க்கையில் இவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதுவே அவருக்கு பெரிதாக நீடிக்கவில்லை. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அவருக்கு குறைய தொடங்கின. இப்போது கொஞ்சம் குறைவான திரைப்படங்களில்தான் நடித்து வருகிறார் காஜல் .

அவருக்கு முன்பு இருந்த அளவிற்கான வாய்ப்புகள் என்பது சினிமாவில் இல்லை. இந்த நிலையில் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேட்டியில் பேசியிருக்கிறார் காஜல் பசுபதி.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்:

அதில் அவர் கூறும் பொழுது பொதுவாக அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு அழைக்கும் பொழுது ஒரு பெண் கமிட்டாக இருக்கிறாரா? அல்லது சிங்கிளாக இருக்கிறாரா? அல்லது திருமணமானவரா? என்றேல்லாம் பார்க்க மாட்டார்கள்.

அவர்கள் எப்போதுமே அட்ஜஸ்ட்மென்ட் பற்றிதான் யோசிப்பார்கள். நாமாக சென்று வாய்ப்பு கேட்டோம் என்றாலே பொதுவாக அட்ஜஸ்ட்மெண்டுக்குதான் அழைப்பார்கள். ஆனால் அவர்களாக அழைத்து வாய்ப்பு கொடுத்தால் அப்பொழுது அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினை அவ்வளவாக இருக்காது.

சன் மியூசிக் சேனலில் வேலை பார்த்த நேரத்தில்தான் நான் நடிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது எனக்கு ஒரு போன் வந்தது அதில் நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு என்று சொன்னார்கள்.

உடனே நான் அதற்கு வேற ஆள் இருக்கிறார்கள். அவங்களை வச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டேன். பொதுவாக என்னிடம் ஃபோன் பேசும் நபர்களிடம் பேமெண்டில் வேண்டுமானால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளலாம். வேற எதிலும் செய்து கொள்ள முடியாது என்று தெளிவாக சொல்லி விடுவேன்.

பொதுவாக வாய்ப்பு தேடி போனால் நேரடியாக இயக்குனரிடம் பேச முடியாது. இயக்குனர் மேனேஜர் என்று ஒருவரை வைத்திருப்பார் அவர்தான் முதலில் ஆரம்பிப்பா.ர் நீங்கள் நேரில் வாங்க பார்த்துக்கலாம் என்று அவர் கூறினாலே அட்ஜஸ்ட்மெண்ட்க்குதான் வர சொல்கிறார் என்று அர்த்தம் என்று கூறியிருக்கிறார் காஜல் பசுபதி

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version