அன்னையர் தினம்.. வளைகாப்பு.. இதெல்லாம் இதுக்கு தான்.. சாண்டி முன்னாள் மனைவி காஜல் பசுபதி சர்ச்சை பேச்சு..!

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் துவங்கி தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் நடிகை காஜல் பசுபதி.

பிரபல டான்ஸ் மாஸ்டரான சாண்டியை திருமணம் செய்து கொண்ட இவர் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டார். ஆனால் அதையும் தாண்டி அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளம் உண்டு என்று கூறலாம்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இதயத்திருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி சுப்பிரமணியபுரம், பெருமாள் என்று நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார். இவரது பெயர் பலருக்கும் தெரியவில்லை என்றாலும் கூட இவரது முகம் அவர்களுக்கு தெரிந்த முகமாகவே இருக்கும் என்று கூறலாம்.

சினிமா வளர்ச்சி:

கலகலப்பு 2 திரைப்படத்தில் கூட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். அதே சமயம் பெண்ணியம் சார்ந்த நிறைய விஷயங்களை பேசுபவராக காஜல் பசுபதி இருந்து வந்துள்ளார்.

சமீப காலமாக விவாகரத்து பெறுவதை கொண்டாட்டமாக பெண்கள் கொண்டாடும் ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது. தன்னுடைய கணவனை பிரிந்த நிறைய பெண்கள் அதை ஒரு கொண்டாட்டமாக விவாகரத்து தினம் என்று கூறி கொண்டாடி பதிவுகளை போடுகிறார்கள்.

இந்த நிலையில் இது சரியா? தவறா? என்பதை குறித்த பேச்சு ஒன்று தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடந்தது. அப்பொழுது அதில் பங்கு கொண்ட காஜல் பசுபதி அது குறித்து அவரது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார்.

அதில் அவர் பேசும்பொழுது அன்னையர் தினம், வளைகாப்பு போன்ற விழாக்களை பெண்கள் கொண்டாடுகிறார்கள் இல்லையா? அது மாதிரிதான் விவாகரத்து தினமும் என்று கூறியிருந்தார்.

சர்ச்சை பதில்:

அதற்கு பதில் அளித்த மறுபக்கம் இருந்த பெண்கள் பேசும்பொழுது அன்னையர் தினம் என்பதும் வளைகாப்பு என்பதும் பெண்மையை கொண்டாட கூடிய ஒரு விஷயம். அது எங்களை பெருமைப்படுத்தும் ஒரு விஷயம்.

வழிவழியாக பெண்கள் கொண்டாடி வரும் பாரம்பரியமான ஒரு விஷயம். அதனால் அதை நாங்கள் கடைபிடிக்கிறோம் ஆனால் அதை தவறு என்று சொல்ல முடியாது என்று கூறியிருந்தனர்.

அதற்கு பதில் அளித்த காஜல் பசுபதி ”அப்படி சில விழாக்களை நீங்கள் கொண்டாடும் பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்கள் எத்தனை பேர் அதனால் மன வருத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று தெரியுமா?

அவர்களை நீங்கள் மலடி என கூறுகிறீர்கள். அவர்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்குவதற்காகவே நீங்கள் இதை கொண்டாடுகிறீர்கள் என்று பதில் கூறியுள்ளார். மேலும் பெண்கள் எப்படி இந்த விழாக்களை எல்லாம் கொண்டாடுவது சகஜமோ அதேபோல அவர்கள் விவாகரத்து பெறுவதையும் கொண்டாடுவது சகஜம்தான் என்பது காஜல் பசுபதியின் வாதமாக இருந்தது. இந்த நிலையில் அவருடைய வாதம் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …