“ஹனிமூனில் உடம்பு துவண்டு போகும் அளவுக்கு..” வெக்கமின்றி வெளிப்படையாக கூறிய கஜோல்..!

தமிழ் சினிமாவில் இருப்பது போலவே பாலிவுட்டிலும் நடிகர்களும் நடிகைகளும் காதல் கொண்டு திருமணம் செய்வது என்பது இருந்து வருகிறது.

பொதுவாகவே சினிமாவில் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் இருக்கும் காதல்தான் பெரிதாக பேசப்படும் விஷயமாக இருந்து வரும். அப்படியாக பாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளாக இருந்து வருபவர்கள் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன்.

இவர்கள் இருவருமே 1990 காலகட்டங்களில் பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் என்று கூறலாம். இப்பொழுதும் அஜய் தேவ்கன் பாலிவுட்டில் பிரபலமான ஒரு நடிகராகவே இருந்து வருகிறார்.

அஜய் தேவ்கன் செலக்‌ஷன்:

முக்கியமாக பெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் என்று மட்டும் நடிக்காமல் அஜய் தேவ்கன் கொஞ்சம் வித்தியாசமான கதை காலங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரது திரைப்படத்திற்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.

 

சமீபத்தில் அவர் நடித்த மைதான் திரைப்படம்  அதிக அளவு வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருந்தது. அதனை தொடர்ந்து இன்னும் வாய்ப்புகளை பெற்று வருகிறார் அஜய் தேவ்கன். அதேபோல நடிகை கஜோலும் பாலிவுட்டில் இப்பொழுதும் வாய்ப்புகளைப் பெற்று நடித்து வருகிறார்.

ஆனால் அஜய் தேவ்கன் அளவுக்கு கஜோலுக்கு வாய்ப்புகள் வருவதில்லை. தமிழில் மின்சார கனவு திரைப்படத்திற்கு பிறகு வெகு வருடங்கள் கழித்து தனுஷ் நடித்த வி.ஐ.பி 2 திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார் கஜோல். இந்த நிலையில் ஆரம்பகட்ட அவரது திருமண வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

கல்யாணத்தில் வந்த விதிமுறை:

அதில் அவர் கூறும் பொழுது ”முதலில் அஜய் தேவ்கனுக்கும் எனக்கும் இடையே திருமணம் நடக்கப்போகிறது என தெரிந்தவுடன் என்னுடைய வெகு நாள் ஆசை ஒன்றை அவரிடம் நிபந்தனையாக கூறினேன். அது என்னவென்றால் திருமணத்திற்குப் பிறகு தேனிலவு செல்லும் பொழுது வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்.

அதுவும் இரண்டு மாதங்கள் பல நாடுகளுக்கு சென்று சுற்ற வேண்டும் என்பதே எனக்கு ஆசையாக இருந்தது. அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று நான் கூறினேன்.

அஜய் தேவ்கனும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பிறகு திருமணம் முடிந்ததும் அதன்படியே நாங்கள் தேன் நிலவுக்கு கிளம்பினோம். ஒவ்வொரு நாடுகளாக செல்ல செல்ல அஜய் தேவனுக்கு உடலில் பிரச்சனை ஏற்பட்டது. அவரால் தொடர்ந்து ஒவ்வொரு நாடுகளுக்கும் பயணிக்க முடியவில்லை.

இதனால் 40 நாட்கள் முடிந்த நிலையில் அவரால் சுத்தமாக முடியவில்லை என்று கூறி அஜய் தேவ்கன் மீண்டும் வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டார்” என்று தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகை கஜோல்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version