கார்த்திக் இப்படி பண்ணுவாருன்னு நெனச்சி பக்கால..! கதறும் கலா மாஸ்டர்..! என்ன ஆச்சு..?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை 90-களில் மிகச் சிறந்த வாரிசு நடிகராக விளங்கிய கார்த்திக்குக்கு பெரிய அளவு பெண் ரசிகர்கள் இருந்தார்கள். மேலும் அனைவரும் இவரை நவரச நாயகன் கார்த்திக் என்று அன்போடு அழைத்து வந்தார்கள்.

இவர் பிரபல நடிகர் முத்துராமனின் மகன் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.இவர் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். நடிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவு கூட கார்த்திக்கு இல்லை. எனினும் பாரதிராஜாவின் கண்ணில் பட்டவர் கதாநாயகனாக மாறினார்.

இடையில் திரையுலக வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும், அவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல் மீண்டும் ரீஎன்றி கொடுத்து தனது திறமையை நிரூபித்தார். அதற்கு உதாரணமாக வருஷம் 16 , கிழக்கு வாசல், உள்ளத்தை அளித்தா போன்ற படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

80, 90களில் கனவு நாயகனாக திகழ்ந்த இவரை பற்றி பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் பொதுவான ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது அதற்கு உரிய பதிலை சொல்லி அனைவரையும் அசத்தி விட்டார்.

அந்தக் கேள்வியானது எந்த நடிகரின் டான்ஸ் கலா மாஸ்டருக்கு பிடிக்கும் என்பது தான். இதற்கு பதில் அளித்த கலா மாஸ்டர் நவரச நாயகன் கார்த்திக்கின் நடனத்திற்கு தான் அடிமை என்று கூறியதை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மேலும் கார்த்திக் செட்டுக்குள் நுழையும் போதே ஹாய் டார்லிங் என்று சொல்லிக் கொண்டே வருவார். அத்தோடு மிகவும் ஜாலியாக அனைவரோடும் பழகுவார். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். அதே நேரத்தில் அவர் டான்ஸில் ஒரு குறும்பு மற்றும் சூட்டித்தனம் நிறைந்திருக்கும்.

எனக்கு மட்டுமல்ல அந்த நாட்களில் எல்லா நடிகைகளுக்கும் பிடித்தமான நடிகராக நவரச நாயகன் கார்த்திக் இருந்தார். சமீப நாட்களாக அவர் எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது போன்ற விஷயங்கள் தனக்கு தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பெருமளவு பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. இதை எடுத்து நவரச நாயகன் கார்த்திக் தான் எப்படி இருக்கிறார் என்பதை வெளியிட்டால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam