உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து பல வருடங்கள் மீனா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இருந்திருக்கிறார்.

பொதுவாக அடுத்த கட்ட இளம் நடிகர்கள் வரும்பொழுது அதற்கு முன்பு நடித்துவரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் என்பது குறைந்துவிடும். அடுத்து வரும் நடிகர்களுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமானால் வாய்ப்புகள் கிடைக்கலாம்.

ஆனால் மீனாவை பொருத்தவரை நடிகர் ராஜ்கிரண் காலகட்டத்தில் அவர் சினிமாவிற்குள் கதாநாயகியாக வந்தாலும் பிறகு அதற்கு பிறகு வந்த இளம் நடிகர்களான அஜித் மாதிரியான நடிகர்களுக்கும் கதாநாயகியாகதான் நடித்து வந்தார் மீனா.

பல காலமாக இளம் நடிகை:

பொதுவாக இந்த மாதிரி முன்பு வந்த நடிகைகள் அடுத்து வரும் நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பது அரிதான விஷயமாகும். ஆனால் மீனாவிற்கு அது நடந்தது ஏனெனில் வெகு வருடங்களாகவே தமிழ் சினிமாவில் இளமையான ஒரு நடிகையாக மீனா இருந்து வந்தார்.

பிறகு அவரது திருமணத்திற்குப் பிறகு மீனா தமிழ் சினிமாவிலிருந்து விலகிவிட்டார். ஆனால் அதற்கு முன்பு தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக மீனா இருந்தார்.

முத்து திரைப்படம் ஜப்பான் தேசத்தில் வெளியான காரணத்தினால் ஜப்பானில் கூட பிரபலமான ஒரு நடிகையாக மீனா இருந்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு மீனா வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கலா மாஸ்டர் பகிர்ந்த விஷயம்:

அதற்கு பிறகு அவர் சினிமாவில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை இவருக்கும் பிரபல டான்ஸ் மாஸ்டரான கலா மாஸ்டருக்கும் இடையே 25 வருட நட்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் மீனா குறித்து நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை கலா மாஸ்டர் தனது பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு என்பது சாதாரண நட்பு கிடையாது. எங்கள் இரண்டு குடும்பங்களுமே நட்பு ரீதியான ஒரு குடும்பமாகதான் இருந்து வருகிறது. அதனால்தான் நாங்களும் நண்பர்களாகவே இருக்கிறோம்.

மீனாவின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த மூன்று மாத காலங்கள் நான் மீனாவுடன்தான் இருந்தேன் மீனாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சினிமாவிற்கும், அவள் ஹீரோயினாக இருப்பதற்கும் சம்பந்தமே கிடையாது.

மீனா மிகவும் மென்மையான மனம் கொண்ட ஒரு பெண் ஆவார். மீனாவின் கணவர் இறந்த பிறகு நான் அவளிடம் உனக்கு வாழ்க்கையில் ஒரு துணை கண்டிப்பாக வேண்டும். உனக்கு ரொம்ப வயதாகவில்லை சின்ன வயது தான் என்று கூறி இருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் அவள் என்னை திட்டுவாள் வேலையை பார்த்துட்டு போங்க, வேண்டாம் அக்கா எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் என்று கூறினாள் மீனா என்று இது குறித்து பேசி இருக்கிறார் கலா மாஸ்டர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version