தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை லைலா 1996 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் மூலமாக சினிமாவில் ஆறுமுகமானார் லைலா. ஆனால் இந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் பிறகு மலையாளத்தில் வந்து நடிக்க தொடங்கினார்.
மலையாளத்திலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. தொடர்ந்து தெலுங்கில்தான் பல வருடங்கள் லைலா நடித்து வந்தார். இரண்டு வருடங்கள் கழித்து 1999 இல்தான் கள்ளழகர் என்கிற திரைப்படத்தில் தமிழில் முதன்முதலாக நடித்தார் லைலா.
லைலாவை பொறுத்தவரை அவர் கலகலப்பாக நடிக்கும் நடிப்பிற்கு அதிக வரவேற்பு இருந்தது. மேலும் அவருக்கென்று ஒரு ரசிக கூட்டமும் இருந்தது இதனால் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்தார் லைலா. தமிழில் கள்ளழகர் திரைப்படத்திற்கு பிறகு ரோஜாவனம் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார்.
தமிழில் வரவேற்பு:
அதற்கு பிறகும் முதல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் லைலா. முதல்வன் திரைப்படத்தை பொறுத்தவரை படத்தில் மொத்தமே ஒரு அரை மணி நேரம் கூட லைலா வரமாட்டார் என்றாலும் கூட ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருந்ததால் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்.
அதற்கு பிறகு பார்த்தேன் ரசித்தேன் திரைப்படம்தான் லைலாவிற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் சிம்ரன் வில்லியாக நடித்திருந்தார். லைலா கதாநாயகியாக அதிக வரவேற்பை பெற்றார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு லைலாவிற்கு தமிழில் வரவேற்புகள் என்பது அதிகரிக்க துவங்கியது. தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு லைலாவிற்கு முக்கியமான வருடம் என்று கூற வேண்டும். தீனா, நந்தா என்று வரிசையாக வெற்றி படங்களாக நடித்து வந்தார் லைலா.
வாய்ப்பை இழந்த லைலா:
இந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் லைலா கொஞ்சம் ஆணவமாக நடந்து கொண்டதால் பட வாய்ப்பு இழந்த சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதனை அந்த படத்தின் தயாரிப்பாளரே கூறியிருக்கிறார்.
தமிழில் பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தானு ஒரு பேட்டி ஒன்றில் லைலாவை பற்றி கூறியிருக்கிறார். பிரபுதேவாவை வைத்து விஐபி என்கிற திரைப்படத்தை இவர் தயாரித்தார். அப்பொழுது அந்த திரைப்படத்தில் முதலில் லைலாவைதான் கதாநாயகியாக நடிக்க வைக்க இருந்தார் கலைப்புலி எஸ் தாணு.
அப்பொழுது படத்தின் பூஜைக்கு லைலாவும் ரம்பாவும் வந்திருந்தனர் ரிசப்ஷன் இடத்திலேயே சம்பளத்தை செக் போட்டு கொடுத்திருந்தார் தாணு. அதனை அவர்களும் தயாரிப்பாளர் கொடுக்க சொன்னதாக கூறி லைலாவிடம் கொடுத்தனர்.
அதற்கு லைலா தயாரிப்பாளர் என்னை நேரில் வந்து பார்க்கல என்ன ப்ரொடக்ஷன் இது? ஏன் என்னை வந்து அவர் பார்க்கவில்லை இதற்கு என்ன அர்த்தம் என்று சண்டை போட்டு இருக்கிறார். இந்த விஷயம் கலைப்புலி எஸ். தாணுவிற்கு தெரிந்த பிறகு அவர் படம் துவங்குவதற்கு முன்பே இவர் இவ்வளவு பிரச்சனை பண்ணுகிறாரே என்று நினைத்து படத்தில் இருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக சிம்ரனை நடிக்க வைத்திருக்கிறார் இதனை அவரே அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்