ஆடிஷன் ரூமில் இது தான் நடக்கும்.. நானே பாத்திருக்கேன்..! – அதிர வைத்த களவாணி பட நடிகை..!

களவாணி பட நடிகை : தமிழில் களவாணி படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருப்பவர் நடிகை மனிஷா பிரியதர்ஷினி.

பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் திரை மறைவில் நடக்கும் சில விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் போட்டு உடைத்து இருக்கிறார்.

இவருடைய இந்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்று தான் கூற வேண்டும். இயக்குனர் ஒருவர் எனக்கு பட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்.

நான் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொழுது அகல்யா என்ற சீரியலில் எழுத்தாளராக பணியாற்றினார். அப்போது இருந்தே எங்களுக்கு அவரை தெரியும் நான் கல்யாண பரிசு என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அவர்தான் முக்கியமான எழுத்தாளராக இருந்தார்.

அவர் மூலமாகத்தான் எனக்கு இந்த சீரியல் வாய்ப்பை கிடைத்தது. ஒரு முறை அவருடைய அலுவலகத்திற்கு பட வாய்ப்பு கேட்டு அவர்கள் அவரை தொடர்பு கொண்டோம்.

நாங்கள் இத்தனை நாட்களாக சினிமாவில் இருக்கிறோம். அடுத்தடுத்த உயரங்களை நோக்கி செல்ல இருக்கிறோம் என்ற எங்களுடைய ஆசையை புரிந்து கொண்டு அவர் அப்படி கேட்டாரா..? என்று தெரியவில்லை.

நான் இப்போது உங்களுக்கு பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்றால் பதிலுக்கு நீங்கள் எனக்கு என்ன கொடுப்பீர்கள்..? என்று கேட்டார். விவரம் புரியாமல் எங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் உங்களுக்குன்னு ஒரு பங்கை எடுத்துக்கொண்டு மீதி சம்பளத்தை எங்களுக்கு கொடுத்தால் போதும் என்று நாங்கள் கூறினோம்.

பணம் எனக்கு தேவை கிடையாது. அதை என்னிடம் அதிகமாகவே இருக்கிறது. நான் நிறைய சீரியல்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பணம் எனக்கு பெரிய விஷயம் கிடையாது. நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஆனால் எங்களுடைய குடும்பம் அப்படி கிடையாது. அப்படி பட வாய்ப்புகள் வேண்டும் என்ற நிலை எங்களுக்கு கிடையாது. இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு தான் பட வாய்ப்புகள் பெற்றோம். இனிமேலும் அது போல் தான் பெறுவோம் என்று என்னுடைய அம்மா கூறிவிட்டார்.

அதற்கு நீங்கள் இத்தனை வருடம் சினிமா துறையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும் என்று தானே கேட்டேன் என்று அவர் கூறினார். நாங்கள் எப்போதும் மாற மாட்டோம். இன்னும் எத்தனை வருடம் சினிமாவில் இருந்தாலும் நாங்கள் மாற மாட்டோம் என்று கூறிவிட்டு வந்து விட்டோம்.

அதன்பிறகு, சரி நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் பட வாய்ப்பு கேட்டு வந்திருக்கும் நடிகைகள் என்ன செய்கிறார்கள் என்று நீங்கள் பாருங்கள் என்று எங்களை அமர வைத்துவிட்டு ஆடிஷனுக்கு வந்திருந்த பெண்களை அறைக்குள் அழைத்தார்கள்.

அப்போது நாங்கள் பார்த்த சம்பவங்கள் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எங்களிடம் கேட்ட அதே கேள்வியை வந்திருந்த அனைத்து பெண்களிடமும் கேட்கிறார்.

அங்கு வந்திருந்த சில பெண்கள் அவர் அப்படி கேட்ட அடுத்த நிமிடமே அவருடைய மடியில் சென்று அமர்ந்து கொண்டு அவருடைய தோல் மீது கையை போட்டு தங்களால் எவ்வளவு நெருக்கமாக அவர் மீது அவருடன் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டனர்.

அமர்ந்து கொண்டு எங்களுக்கு நீங்கள் பட வாய்ப்பு கொடுத்தால் மட்டும் போதும். எங்களுடைய முகம் சீரியலில் தோன்றினால் மட்டும் போதும் திரையில் தோன்றினால் மட்டும் போதும் அதற்கு மட்டும் உதவி செய்யுங்கள் உங்களுக்கு தேவையானதெல்லாம் கிடைக்கும் என்று அவர்களுடைய அவரின் மீது அமர்ந்து கொண்டு அவர் மீது அமர்ந்து கொண்டு பேசினார்கள்.

இப்படி எல்லாம் பட வாய்ப்புகளை பெற வேண்டுமா..? என்று நானும் என் அம்மாவும் கிளம்பி விட்டோம் என்று பேசி இருக்கிறார் களவாணி பிரியதர்ஷினி.

ஒருமுறை என்னை சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற வகையில் என்னுடைய பிறந்தநாள் அன்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்கப் போனேன். அவர் நான் காலில் விழும் அளவுக்கு பெரிய ஆள் கிடையாது என்று என்னை தூக்கி விட்டு இறுக்கமாக கட்டி பிடித்தார்.

நான் அதிர்ந்து போய் விட்டேன். அவரை தட்டி விட்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு சீரியலில் நான் ஒப்பந்தமானேன்.

அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னை அவர்கள் வழிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற பல முயற்சிகளை எடுத்தார். ஆனால், நான் உடன்படவில்லை.

ஒரு கட்டத்தில் அவர்களுடைய ஆசைக்கே நான் இணங்காததால் என்னுடைய கதாபாத்திரத்தை க்ளோஸ் செய்து விட்டார்கள். அதனால் தொடர்ந்து அந்த சீரியலில் என்னால் நடிக்கும் முடியாமல் போய்விட்டது என்று பேசி இருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …