திரையுலகை பொருத்த வரை பல்வகையான திரைப்படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கூடிய வகையில் வெளி வரும். அதிலும் குறிப்பிட்டு இயக்குனர்களின் பெரிய பட்ஜெட் படம் என்றால் அனைவரும் ஆவலோடு காத்திருப்பார்கள்.
அந்த வகையில் அண்மையில் வெளி வந்த கல்கி 2898 AD படம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டதோடு மட்டுமல்லாமல் கலவை ரீதியான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
600 கோடி பட்ஜெட்..
பாகுபலி படம் போல் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகிய இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளி வந்த நடிகையர் திலகம் படம் தேசிய விருதை பெற்றது உங்கள் நினைவில் இருக்கலாம்.
இதனை அடுத்து இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கக்கூடிய படங்களின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் கல்கி 2898 ஏடி.
மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் அவரோடு இணைந்து அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், கமலஹாசன், திஷா பாட்னி, பசுபதி, ஷோபனா, அன்னா பென் போன்ற பல நடிகர்கள் இணைந்து நடித்து மாபெரும் படமாக வெளி வந்தது.
7 நாள் கல்கி 2898 ஏடி படம்..
மேலும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கக் கூடிய இந்த திரைப்படமானது வசூலில் தினம் தினம் புதுப்புது சாதனைகளை படைத்து வருவதாக இணையங்களில் செய்திகள் வெளி வந்துள்ளது.
அந்த வகையில் இந்த படம் வெளி வந்து 7 நாட்கள் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளி வந்து அனைவரது புருவங்களையும் உயர வைக்கக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.
மேலும் இந்த படம் ஏழு நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கும் என்ற அனுமானங்கள் உங்களுக்குள் உள்ளதா? அப்படி என்றால் எவ்வளவு வசூல் செய்திருக்கும் என்பதை நீங்கள் கமெண்ட் செக்ஷனில் பதிவிடலாம்.
மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..
அப்படி நீங்கள் பதிவு செய்து இருந்தாலும் செய்யாவிட்டாலும் இந்த படம் உலக அளவில் ஏழு நாட்களில்ரூபாய் 710 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது மேலும் தமிழ்நாட்டில் மட்டும் இது 27 கோடி அளவு வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் சாதனையை நிகழ்த்தி விட்டது.
இது சம்பந்தமான விஷயம்தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி அனைவரையும் வாய் அடைக்க வைத்து விட்டது.