கள்ளச்சாரயத்தை விட மோசமானவர்கள் சூரியா போன்ற நடிகர்கள்..! விளாசும் இணைய வாசிகள்..! என்ன ஆனது..?

பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் மகன் நடிகர் சூரியா, ஒரு வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆரம்ப நாட்களில் இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் போதிய அளவு வரவேற்பை ரசிகர்களின் மத்தியில் பெறவில்லை.

இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த நந்தா திரைப்படத்தை தொடர்ந்து பிதாமகன் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் கவனம் இவர் மீது திரும்பியது.மேலும் இந்த படங்களைத் தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகர் சூரியா..

நடிகர் சூரியா தன்னோடு இணைந்து நடித்த சக நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்கள் திருமணம் குறித்து அடிக்கடி இணைய பக்கங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளிவரும்.

இந்நிலையில் அண்மையில் கூட இவர் தனது கூட்டுக் குடும்பத்தை விட்டு பிரிந்து மும்பைக்கு சென்றதை அடுத்து இன்னும் குடும்ப விவகாரம் இணையங்களில் புகைய ஆரம்பித்து ஜோதிகா பற்றியும், சிவகுமார் பற்றியும் பல்வேறு கலவை ரீதியான விமர்சனங்கள் வெளி வந்தது.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் நேற்று நடந்த கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த விஷயம் குறித்து நடிகர் விஜய் போட்டிருந்த பதிவானது இணையத்தில் மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியிலும் படு வேகமாக பரவி அவருக்கு ஆதரவை தந்துள்ளது.

இந்நிலையில் கள்ளச்சாராயத்தை விட மோசமானவர்கள் சூர்யா போன்ற நடிகர்கள் என்று பல இணையதள வாசிகள் விளாசி வருகிறார்கள் இதற்கு காரணம் என்ன? என்ன ஆனது? என்பது பற்றி எந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கள்ளச்சாராயத்தை விட மோசமானவரா சூரியா..

2021-க்கு முன்பு வரை தமிழ்நாட்டில் பூனை கடித்து எலி செத்து விட்டால் கூட குய்யோ முறையோ என்று கத்தி கூப்பாடு போட்ட ஒரு குறிப்பிட்ட நடிகர்கள். தற்போது கள்ளச்சாரயத்தினால் கிடுகிடுவென பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இப்போது எங்கே இருக்கிறார்கள்..? என்ன செய்கிறார்கள்..? என எதுவும் தெரியவில்லை.

இதற்கு நடிகர்கள் ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும்..? அவர்களுக்கா நாம் ஓட்டு போட்டோம்…? அவர்களை கேள்வி கேட்க மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறது..? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் கேட்கக் கூடிய கேள்வி முற்றிலும் சரியானது.

ஆனால், இதே நடிகர்கள் தான் 2021 ஆண்டுக்கு முன்பு வரை நாட்டில் எந்த பிரச்சினை நடந்தாலும் தங்களுடைய கருத்தை முன்னால் கொண்டு வந்து வைத்து அந்த பிரச்சினையை பூதாகரமாகி மிகப்பெரிய ஒரு பேசு பொருளாக உருவாக்க வைத்தவர்கள்.

மேலும் மக்கள் மனதை பெரிய அளவில் மடை மாற்றம் செய்தனர். இதனை நிழல் உலக போர் என்று கூட சிலர் கூறினார்கள். இதனை மறுக்கவே முடியாது. இவை அனைத்தும் செய்திகளாக இருக்கின்றன. அத்துடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

விளாசும் இணையவாசிகள் ரீசன் என்ன?..

ஆனால், 2021-க்கு பிறகு இந்த இரண்டரை ஆண்டு காலமாக எந்த நடிகரும் எந்த பிரச்சினை குறித்தும் வாய் திறந்ததாக தகவல் இல்லை.

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து இருப்பதன் காரணமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் ஒழிய வேற எந்த நடிகரும் கள்ளச்சாரய சாவுகள் குறித்து தங்களுடைய கருத்தை பதிவு செய்ததாக தெரியவில்லை.

மேலும் இங்கே எந்த நடிகரும் பதிவு செய்யவில்லை என்றாலும் நடிகர் சூர்யா கட்டம் கட்டி கவனிக்கப்படுகிறார்.

என்ன காரணம் என்றால் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த ஒரு பிரச்சனையின் போது ஆளும் அரசை விமர்சிக்கும் விதமாக இப்போது நாம் தான் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் நண்பர்களே.. என்று வீரம் பொங்க ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார்.

இது தான் தற்போது அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது. இப்போது எங்கே மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்…? கள்ளச்சாரயத்தை விட மோசமானவர்கள் உங்களைப் போன்ற நடிகர்கள் என சூர்யாவை பொளந்து கட்டி வருகிறார்கள் இணைய வாசிகள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version