“பைனாப்பிள் கேசரி..!” – கல்யாண வீட்டு ஸ்டைலில் செய்யலாமா..!

கல்யாண வீடுகளில் வைக்கும் கேசரிக்கு கூடுதல் சுவை இருக்கும். அது போல நம் வீடுகளில் செய்யும்போது அந்த சுவை இல்லை என்று அனைவரும் கூறுவார்கள்.

 அந்தக் குறையை நீக்க உங்கள் வீட்டில் நீங்கள் இந்த முறையை பயன்படுத்தி பைனாப்பிள் கேசரியை செய்தால் அது கல்யாண வீட்டு ஸ்டைலில் கண்டிப்பாக இருக்கும்.

 அது மட்டுமல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கல்யாண வீட்டு ஸ்டைலில் பைனாப்பிள் கேசரியை எப்படி செய்வது என்பதை இப்போது இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பைனாப்பிள் கேசரி செய்ய தேவையான பொருட்கள்

1.நெய் 100

2.உலர்ந்த திராட்சை 20

3.வறுத்த ரவை ஒரு கப்

4.வெந்நீர் மூன்று கப்

5.சர்க்கரை ஒன்றரை கப்

6.பைனாப்பிள் எசன்ஸ் மூன்று டீ ஸ்பூன்

7.எண்ணெய் மூன்று டீஸ்பூன்

8.முந்திரி பதினைந்து

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதே நெய் விட்ட வாணலியில் ரவையை போட்டு ஐந்து நிமிடம் நன்கு வறுக்கவும். நீங்கள் வறுக்கும் போது அடுப்பினை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.

இதனை அடுத்து நீங்கள் வைத்திருக்கும் வெந்நீரை அந்த ரவையோடு சேர்த்து கட்டி சேராமல் கிளற வேண்டும். இதனை அடுத்து இதில் சர்க்கரை கலந்த பின் எண்ணெய் மற்றும் தேவையான அளவு நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்.

பிறகு இந்த சர்க்கரை முழுவதும் கரையக்கூடிய வேளையில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் பைனாப்பிள் எசென்ஸ் இதனோடு சேர்த்து முழுமையாக சேர்த்து விட்ட பின் கிளறி விடவும்.

மேலும் அடுப்பினை மிதமான சூட்டில் வைத்து வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை இதனோடு சேர்த்து கிளறி விடவும்.

இப்போது கல்யாண வீட்டில் செய்து அசத்தும் கேசரியை உங்கள் வீட்டில் நீங்கள் செய்து அசத்தி விட்டீர்கள் என்று கூறும் அளவிற்கு எந்த பைனாப்பில் கேசரியின் சுவை இருக்கும். நீங்களும் எந்த முறையை ஃபாலோ செய்து கேசரியை செய்து பாருங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …