போடிடா வெடிய… முதல் முறையா கன்னட படத்தில் காலடி பதிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்…!!

 திரைப்படத் துறையை பொறுத்தவரை வாரிசு நடிகர் மற்றும் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் எப்போதும் உள்ளது. அந்த வரிசையில் வாரிசு நடிகைகளை பொறுத்த வரை சுருதிஹாசன், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ்சை தொடர்ந்து இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன்  இடம் பிடித்திருக்கிறார்.

இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் மட்டுமே நடித்து வந்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை இவர் கடந்த வருடம் வெளியான மாநாடு திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 இது போலவே மலையாளத்தில் வெளியான ஹிருதயம் என்ற படத்தில் இவர் நடித்து அந்த படம் சூப்பர் டூப்பர் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.

 இதனை அடுத்து சரியான ராசி உள்ள நடிகை என்ற பெயரை பெற்றுவிட்ட கல்யாணி   பிரியதர்ஷன் தற்போது தென்னிந்திய மொழியான கன்னட திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்திகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.

அந்த வரிசையில் இவர் கன்னட சினிமாவின் பிரபல நடிகரான ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து அவரது பேரனான ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் ஆகிய யுவராஜ் குமார்  கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகியாக அவருடன் ஜோடி சேர இருக்கிறார்.

 இந்த செய்தியானது அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக இருக்கும் என்றும் இதற்காக இது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படும் நிலையில் கன்னடத்திலும் கொடி கட்டி பறக்க இருக்கும் கல்யாணி பிரியதர்ஷினிக்கு தற்போது இருந்தே ஆதரவு மற்றும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

 இதனை அடுத்து இவரது ரசிகர்கள் அதை படத்தின் பெயர் என்ன? யார் இயக்க இருக்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளை அடிக்கடிக்காக கேட்டு வருவதால் அது பற்றிய தகவல்களும் படத்தைப் பற்றிய அப்டேட்டுகளும் விரைவில் வெளிவரும் என சொல்லலாம்.

தனது அபார நடிப்பு திறன் மூலம் கன்னட திரை உலகிற்கு அடி எடுத்து வைக்கும் இந்த நடிகைக்கு அவரது ரசிகர்கள் அனைவருமே வாழ்த்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam