உலக நாயகன் தயாரிக்கும் படத்தில் உதயநிதிக்கு பதில் யார் ?அதிர்ஷ்டசாலியான நடிகர் இவரா?

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து கமலஹாசனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மற்றும் பல வாய்ப்புகள் வந்து குவிந்துள்ள நிலையில் கமலஹாசனின் தயாரிப்பில் உருவாக போகும் புதிய படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

 இதனை அடுத்து இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் பட்டதால் அந்த படத்தில் நடிக்க போவதில்லை என்று அறிவித்தார். அது மட்டுமல்லாமல் இவரது கடைசி படமாக மாமன்னன் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கமலஹாசன் தயாரிக்க கூடிய அந்த படத்தில் உதயநிதிக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.

 இதனை அடுத்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கும் கதைக்கும் விஜயசேதுபதி தான் கச்சிதமாக பொருந்துவார் என்பதால் அவரையே நடிக்க வைக்கலாம் என்று தற்போது ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

எனவே இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அது போலவே விக்ரம் படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். வசூல் ரீதியாக பெரும் சாதனையை புரிந்து இருந்த இந்தப் படம் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை அடுத்து அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த டி எஸ் பி என்ற படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இவரை இந்த திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் இனி முழு நேரமும் அரசியலில் களம் இறங்கி விட்ட உதயநிதி இனி திரைத்துறை பக்கம் இருந்து எதுவும் செய்ய முடியாது என்பதால் ரெட் லைன் மூவியை கூட தனது மனைவியின் நிர்வாகிக்க திட்டமிட்டு இருக்கிறார் என்ற அரசியல் புறசலான செய்திகள் வெளிவந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …