“கமல் டார்ச்சர் தாங்காமல்…” வெளிநாட்டுக்கு ஓடிய நடிகை.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக்கொண்டு இருப்பவர். உலகநாயகன் என்று அவரை அழைக்கும் அளவுக்கு நடிப்பில் அவர் ஒரு சக்ரவர்த்தியாக தன்னை நிரூபித்து இருக்கிறார்.

இதுவரை 3 முறை அவர் தேசிய விருது வாங்கியிருக்கிறார். நாயகன், மூன்றாம்பிறை, இந்தியன் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக இந்திய அரசின் தேசிய விருது பெற்றவர் நடிகர் கமல்ஹாசன்.

கதை ஆசிரியராக, இயக்குநராக, பாடகராக, வசன எழுத்தாளராக, தொழில்நுட்ப கலைஞராக திரைக்கலையில் அவர் சிறந்த விளங்குவதால், கலைஞானி என்ற பட்டப் பெயரை கமலுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இப்போது மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தல், அடுத்து 2026ம் ஆண்டில் வர இருக்கிற சட்டசபை தேர்தலுக்காக இப்போதே தயாராகி வருகிறார்.

அதே நேரத்தில் இந்தியன் 2., இந்தியன் 3, தக்லைப் போன்ற படங்களிலும் தீவிரமாக நடித்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் கதைகளை கேட்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி விஜய்டிவியில் ஆண்டுதோறும் 3 மாதங்களுக்கு மேல் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படம் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. இந்த படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். இந்த படத்தில் அன்னலட்சுமி கேரக்டரில் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.

ரொமான்ஸ் காட்டி…

இந்த படத்தில் சில காட்சிகளில் அபிராமி, கமல் நெருக்கமாக நடித்திருந்தனர். குறிப்பாக, ஒன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லே, ஒண்ணும் இல்லே என்ற பாடல் காட்சியில் அதிக ரொமான்ஸ் காட்டி நடித்திருந்தனர்.

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான், அபிராமி நல்ல நடிகை. விருமாண்டி படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார். அந்த படத்தில் கமல்ஹாசன், அபிராமியை ரொம்பவே டார்ச்சர் செய்து விட்டார்.

வெளிநாட்டுக்கு ஓட்டம்

இதன் காரணமாகவே அபிராமி, வெளிநாட்டுக்கு ஓடிப் போய் விட்டார். திருமணமாகி அங்கேயே செட்டில் ஆகி விட்டார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதுவும் கமல்ஹாசனுடன் அவர் தக்லைப் படத்தில் நடிக்க இருக்கிறார், என்று கூறியிருக்கிறார்.

கமல் டார்ச்சர் தாங்காமல், வெளிநாட்டுக்கு ஓடிய நடிகை அபிராமி என்ற புதிய சர்ச்சையை கிளப்பிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version