என்னடா சொல்றீங்க.. குணா குகையில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை கமல் என்ன செய்தார் தெரியுமா..?

இந்திய திரைப்படங்களில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் கமலஹாசன் உலக அளவில் இருக்கும் நடிகர்களோடு ஒப்பிட்டு பேசக்கூடிய உலக நாயகனாக திகழ்கிறார்.

இதையும் படிங்க: ரெஜினாவிற்கு திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

சிறு வயது முதற்கொண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் இன்று வரை அற்புதமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று முத்திரையை பதித்து வைத்திருப்பவர்.

உலகநாயகன் கமலஹாசன்..

மக்கள் விரும்பும் உலகநாயகனின் நடிப்பை பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு படத்திலும் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடிய இவர் குணா திரைப்படத்தில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்தப் படத்தில் கமலஹாசன் அபிராமி, அபிராமி.. என்று உருகி உருகி காதலிக்க கூடிய காட்சிகள் ஒவ்வொன்றும் உங்கள் மனதில் நீங்காமல் அப்படியே இருக்கும். எவ்வளவு பெரிய விஷயத்தையும் எளிமையாக உணர்த்த வைக்கக்கூடிய தன்மை இவரது நடிப்பில் இருக்கும்.

அந்த வகையில் தற்போது வெளி வந்திருக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் என்ற திரைப்படமானது மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் குணா குகையை சுற்றிப் பார்க்கச் செல்லும் நண்பர்களுக்கு நடக்கும் அதிர்ச்சியான சம்பவத்தை பற்றி இந்த பட கதை முழுவதும் சுவாரஸ்யமாக நகர்கிறது.

குணா குகையில் எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள்..

மேலும் இந்த படத்தில் குணா படத்தின் தாக்கம் இருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்க கூடிய நேரத்தில் இந்த படத்தை பார்த்த நடிகர் கமலஹாசன் பட குழுவை நேரில் அடைத்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களோடு அமர்ந்து சில மணி நேரங்கள் உரையாடி இருக்கிறார்.

அந்த உரையாடலில் நிகழ்ந்த சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக குணா படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களை பற்றி கமல் விரிவாக மஞ்சு மெல்பாய்ஸ் பட குழு உடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

கமல் இப்படியா? செய்தார்..

குணா படத்தின் படப்பிடிப்பு அந்த குகையில் நடக்கும் போது அங்கிருந்து மூன்று குரங்குகளின் மண்டையோடுகளை கமலஹாசன் கையில் எடுத்து வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் குகையில் தெரியாமல் சிக்கிக் கொள்ளும் குரங்குகள் அங்கு அப்படியே அங்கேயே இறந்து போய்விடும் என்ற உண்மையை கூறியிருக்கிறார்.

அத்தோடு தான் எடுத்து வைத்த மூன்று குரங்குகளின் மண்டையோடுகளை அவர் இயக்கிய ஹே என்ற படத்தில் வரும் ஒரு காட்சியில் பயன்படுத்தியதாக கமலஹாசன் கூறிய விஷயம் தற்போது வைரலாகி பலர் மத்தியிலும் பேசக்கூடிய பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதனை அடுத்து குணா குகையில் கமல் எடுத்த குரங்கின் மண்டையோடுகள் பற்றிய மர்மங்கள் என்ற ரீதியில் அவரது ரசிகர்கள் வெகு சுவாரஸ்யமாக இந்த விஷயத்தை பகிர்ந்து வருவதோடு கமலஹாசனின் புத்திசாலித்தனத்தை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வைரலாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் கமல் மஞ்சு மெல் பாய்ஸ் படக்குழுவினரை பாராட்டிய விஷயத்தை அறிந்து அனைவரும் வியப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

மேலும் விரைவில் கமலஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 யை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருப்பதாகவும் எப்போது ரிலீஸ் என்ற விஷயத்தை பலரும் கேட்டிருக்கிறார்கள்.

இதற்கான பதிலை விரைவில் இந்தியன் 2 படக்குழு அறிவிக்கும் என்று நம்பிக்கையோடு கமலஹாசனின் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: படிக்காதவன் படத்தில் சிறு வயசு ரஜினியாக நடித்த சிறுவன் இந்த நடிகையின் கணவனா..? வைரல் போட்டோஸ்..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version