உலகநாயகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய கமலஹாசன் தன்னுடைய 68வது பிறந்தநாளை கொண்டாடி வேறு லெவலில் போட்டோ ஷூட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயம் கமலஹாசனுக்கு 68 ஆ இல்லை 18 ஆ என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு உள்ளது. அந்த அளவுக்கு ஆண்டவர் மனதையும், உடலையும் கட்டுக்கோப்பாக இன்றும் வைத்திருப்பது தான் இந்த ரகசியமா? என்று கேட்கத் தோன்றுகிறது.
சமீபத்தில் தீபாவளியின் போது வெளிவந்த தேவர்மகன் கட்டத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ சூட் மிக வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது அதையும் மிஞ்சி இப்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அப்ளாஸ் பெற்றுவிட்டது என்று கூறலாம்.
இந்தப் புகைப்படத்தில் கமலஹாசன் மூன்று அழகிகளுடன் ஜாலியாக சிரித்தபடி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் தான் தற்போது இணையத்தையே வைரல் ஆக்கிவிட்டது என்று கூறலாம். இந்த புகைப்படத்தில் தாடி, மீசையோடு செம ஸ்டைலிஷ் ஆக கூலிங் கிளாஸ் மற்றும் கோட் சூட் போட்டு கலக்கிவிட்டார்.
மேலும் மாடல்களின் மீது சாய்ந்தபடி இவர் கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து அன்றும் இன்றும் என்றும் இளமை நாயகன் உலக நாயகன் கமலஹாசன் என்று சொல்லத் தோன்றுகிறது.
மேலும் இளமை… இதோ… இதோ… என்ற பாடல் இவருக்காக தான் எழுதப்பட்டதோ என்று கேட்கவும் தோன்றுகிறது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் லைக் குவித்து வருவதோடு என்றும் 16 மார்க்கண்டையனுக்கு என்றால் அது உங்களுக்கும் பொருந்தும் என்று கூறி இருக்கிறார்கள்.
ஏற்கனவே இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இந்தியன் 2 வில் படு பிஸியாக நடித்து வரும் இவர் மணிரத்தினம் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் இந்த நிலையில் இது போன்ற போட்டோ சூட்டை நடத்தி இவர் ரசிகர்களை திணற வைத்திருக்கிறார் என்று கூறலாம்.