இணையத்தில் லீக் காண கமல் நடித்த இந்தியன் 2… சேனாதிபதி தாத்தாவின் லுக்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து கமலுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. இதனை அடுத்து இவன் நடித்த படங்களின் இரண்டாம் பகுதியாக நடிக்க இருந்த படம் இந்தியன் 2.

ஏற்கனவே இந்தியன் 1 பகுதியில் கமலஹாசன் பக்காவாக நடித்திருப்பார். மேலும் நாட்டில் உள்ள ஊழலை அழகாக படம் பிடித்து காட்டி இருந்த இந்த படத்திற்கு  ஏகோபித்த வரவேற்பு கிடைத்த நிலையில் அதனுடைய இரண்டாம் பகுதி தற்போது படப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 ஏற்கனவே சில சிக்கல்களின் காரணமாகவும் கொரோனாவின் காரணமாகவும் நிறுத்தப்பட்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தை ஷங்கர் தான் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த படத்தில் கமலோடு இணைந்து காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங்,பிரியா பவானி சங்கர், சித்தார் என பல முக்கிய நடிகர்கள் குறிப்பிட்ட வேடத்தில் பக்காவாக நடித்து வருகிறார்கள்.

 இந்த படத்திற்கான இசையை அனிருத் அமைத்திருக்கிறார். மேலும் படப்பிடிப்பானது சென்னை விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு படமாக்கப்பட்ட சில காட்சிகளை மொபைலில் படம் எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

 அதில் கமல் சேனாதிபதி வேஷத்தில் நடந்து செல்வது போன்று இருக்கின்ற புகைப்படமானது வைரலாகி உள்ளது. இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்தத் திரைப்படம் எப்போது திரைக்கு வெளி வரும் அதை நாங்கள் பார்க்க ஆவலோடு இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

எனவே விரைவில் திரை அரங்குகளில் வர இருக்கக்கூடிய இந்த சேனாதிபதி தாத்தாவை பார்க்க அனைவருமே தற்போது காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டும் அல்ல இந்தியன் 2வும் இந்தியன் ஒன்று போல் தான் இருக்குமா? அல்லது இந்த கதையில் ஏதாவது டுவிஸ்ட் இருக்குமா? என்பது திரைக்கு வந்த பின்பு தான் தெரியவரும்.

 எனவே படத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட்டை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராமல் எந்த படத்தின் கதை நகர்வு இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …