பாவம்.. பிக்பாஸ் மேடைன்னு நெனச்சிட்டாரு போல.. கமல்ஹாசனை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!

மிகப்பெரிய மேதாவிகளாக, அறிவாளிகளாக, ஜீனியஸ் என்று போற்றப்படும் சில மனிதர்கள், சில நேரங்களில் அவர்களால் அந்த மேதாவித்தனத்தை தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாமல் அசிங்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுண்டு.

நடிகர் கமல்ஹாசன்

அந்த மாதிரி தான் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து மொக்கை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றால் அது உண்மைதான். எப்போது அவர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை துவக்கினாரோ, அப்போதே அவருக்குள் இருந்த நடிகன் என்ற சிறந்த கலைஞர் மறைந்து போய் ஒரு அரசியல்வாதியாக அவர் தன்னை பாவித்துக்கொண்டு அவர் செய்யும் சில சேஷ்டைகளை பார்க்கும்போது ரசிகர்களுக்கு எரிச்சல் தான் வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில்…

குறிப்பாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் மேடையில் பேசும்போது, தனது கருத்துக்களை மிகவும் மிகைப்படுத்தி பேசிவிட்டு ரசிகர்களை தனது அறிவாளித்தனத்தை காட்டுவது போல் ஒரு பார்வை பார்ப்பார்.

அங்கு அங்கு இருப்பவர்களும் வேறு வழியின்றி அவரது பேச்சுக்கு கைதட்டி ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அப்படித்தான் சொல்லி இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்: இந்த ரோலில் நடிக்க நான் ரெடி.. கூச்சமின்றி கூறிய சாந்தினி தமிழரசன்..!

ஆனால், நிஜத்தில் கமல்ஹாசன் பேசினால் சிலருக்கு புரியாது. பலருக்கு பாராட்டத் தோணாது. யாருக்குமே கைதட்ட தோணாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அது தெரியாமல் இப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிவிட்டு கைதட்டல் எதிர்பார்த்து ஏமாந்து போய் அவர் விழிப்பது செம வைரல் ஆகி வருகிறது

அரசியல் மேடை நிகழ்ச்சி

இந்தியா டுடே பத்திரிகை சார்பாக நடத்தப்பட்ட அரசியல் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமலஹாசன் பேசிய விதமும், பேசிய தொனியும் ரசிகர்களை கடுமையான சிரிப்பலையில் ஆழ்த்தி இருக்கிறது.

அவர் கூறியதாவது, திராவிடம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அது உலகம் முழுவதும் இருக்கிறது என்பதுதான் கமல்ஹாசனுடைய கருத்து. அவர் பேசிய கருத்து உண்மையா இல்லையா என்பதை உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறோம்.

இதில், எங்கள் கருத்தை கூறி இந்த பதிவை அரசியல் பதிவாக ஆக்க விரும்பவில்லை. அதேசமயம் அந்த கருத்தை கூறி முடித்துவிட்டு கமலஹாசன் செய்த சில விஷயங்கள் தான் தற்போது ரசிகர்கள் அவரை பங்கம் பண்ணுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.

இதையும் படியுங்கள்: “கேரவேன் வந்த பிறகு.. பட வாய்ப்புக்காக படுக்கை..” ரகசியம் உடைத்த நடிகை Y விஜயா..!

கைதட்டலை எதிர்பார்த்து…

பிக் பாஸ் மேடையில் அரசியல் பேசிவிட்டு பார்வையாளர்களை நோக்கி ஒரு நிமிடம் அமைதியாக ஒரு வினாடி அமைதியாக போஸ் கொடுப்பார் கமல்ஹாசன். அப்போது அங்கு இருக்கும் பார்வையாருக்கு அனைவரும் ஆகா ஓகோ என கைதட்டுவார்கள்.

பங்கம் செய்த நெட்டிசன்கள்

ஆனால், தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் அந்த கருத்தை கேட்டு கடுப்பாகிய தருணங்கள் பல உண்டு. அதற்குள் நாம் போக வேண்டாம். ஆனால், தற்பொழுது இந்த இந்தியா டுடே நிகழ்ச்சி மேடையை பிக் பாஸ் மேடையை போல நினைத்துக் கொண்டு பிக் பாஸ் மேடையில் எப்படி பேசுவாரோ, அதேபோல பேசி பார்வையாளர்களை கைதட்டுவார்கள் என்று பார்க்கிறார் கமல்ஹாசன். ஆனால் அங்கிருந்தவர்கள் யாரும் கைதட்டவில்லை.

ஒருவேளை அவர் சொன்ன கருத்துக்கு கருத்தை கேட்டு பிரமித்து போய்விட்டார்களோ என்னவோ.. என்று இதனை பங்கம் பண்ணும் விதமாக இணைய பக்கங்களில் பல்வேறு மீம்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

பாவம்.. பிக்பாஸ் மேடைன்னு நெனச்சிட்டாரு போல என்று கமல்ஹாசனை பங்கம் செய்கின்றனர் நெட்டிசன்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version