விலகிய கமல்ஹாசன்.. இனி, பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இந்த நடிகர் தானாம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகம் முழுக்க மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது தான் பிக் பாஸ் .

இந்த நிகழ்ச்சி இதுவரை கிட்டத்தட்ட 7 சீசன்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வொரு சீசனாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது .

பிக்பாஸ் நிகழ்ச்சி:

ஆரம்பத்திலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி தொகுத்து தொகுத்து வழங்கி வந்தார்.

பல்வேறு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் நுழைந்ததன் மூலமாக அவர்கள் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், பிக் பாஸின் மூலம் பிரபலமான எத்தனையோ பிரபலங்கள் இந்த நட்சத்திர நடிகராக திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் 8வது சீசன் விரைவில் துவங்க உள்ளது.

இப்படி எல்லோரும் இந்த சீசனுக்காக எதிர்பார்த்து இருந்த சமயத்தில் திடீரென கமல்ஹாசன் நான் இனிமேல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை எனக்கூறி அதிரடியாக அறிக்கை வெளியிட்டு அதிலிருந்து வெளியேறினார்.

இதற்கான காரணம் என்னவென்றால் கமிட்டான திரைப்படங்களில் சரியாக நடித்துக் கொடுக்க முடியாததால் இயக்குனர்களுக்கு கொஞ்சம் மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது.

வெளியேறிய கமல்:

அதனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு போதிய நேரம் எனக்கு இல்லாததால் இதிலிருந்து விடைபெறுகிறேன் என கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார் .

அடுத்தது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவார்கள் என்று ஒரு பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இதற்காக நடிகர் சூர்யா விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்களின் பேச்சுக்கள் தொடர்ந்து அடிபட்டு வந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு ஈடாக யாரேனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

அதில் மக்கள் சில பேர் சில நடிகர்களின் பெயரை பரிந்துரைத்தார்கள். குறிப்பாக பரவலாக நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் .

கமல் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி:

கிட்டத்தட்ட அவர் கமல் ரேஞ்சுக்கு நிகழ்ச்சியை கொண்டு செல்வார் என கருத்துக்களை கூறி வந்தார்கள்.

இப்படியான நேரத்தில் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போவதாக தற்போதைய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் 8 வது சீசன் நிகழ்ச்சி தொகுப்பாளராக விஜய் சேதுபதி வைத்து ப்ரோமோ ஷூட் கூட எடுத்து முடித்துவிட்டார்கள்.

எனவே வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிக் பாஸ் 8 சீசன் துவங்கும் என கூறப்படுகிறது.

இதனால் கமல் விட்டு சென்ற இடத்தை விஜய் சேதுபதி நிரப்புவாரா என எதிர்பார்ப்புடன் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version