நாயகன் படத்துக்கு பின்னால் 35 ஆண்டுகளுக்குப் பின் இணைய இருக்கும் கமலஹாசன் மற்றும் மணிரத்தினம்…!

 நடிகர் கமலஹாசன் நடித்த விக்ரம் படம் சினிமா வரலாற்றையே புரட்டிப் போடக் கூடிய வகையில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கமலுக்கு ஒரு ரீ என்ட்ரி  கொடுத்திருக்கிறது என்று கூட கூறலாம்.

 இதனை அடுத்து இவர் முதல் பாகங்களில் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

மேலும்  நேற்று பிறந்த நாளை கொண்டாடிய கமலஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதனை அடுத்து இந்தியன் இரண்டு திரைப்படத்திற்கு பின்னால் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ஸ் மூவிஸ் மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து வழங்கக்கூடிய படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் இசையமைக்க அதில் அறிவு கமலஹாசன் நடிக்க உள்ளார்.

 இந்தியன் 2 திரைப்படத்திற்கு பின்னால் இவர் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் அல்லது துணிவு பட இயக்குனர் எஸ் வினோத் ஆகியோரின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென்று மணிரத்தினத்தோடு இணைந்த படம் என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 35 ஆண்டுகளுக்கு பின்னால் இந்தக் கூட்டணியில் ஒன்றாக இணைந்திருக்கும் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் 35 ஆண்டுகளுக்கு முன்னால் இவர் நாயகன் படத்தில் நடித்திருந்தது அனைவரும் அறிந்த விஷயமே.

இதனையடுத்து தற்போது இந்த கூட்டணியில் வர இருக்கக்கூடிய படம் நிச்சயமாக பட்டையை கிளப்பும் என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிக மகிழ்ச்சியில் இருப்பதோடு அவரது பிறந்தநாள் அன்று வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதோடு பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam