ரஜினி போட்டோவை பார்த்து கடுப்பான கமல்ஹாசன்.. பகீர் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

பாட்ஷா படத்தில், நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா என பாடினார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் சமீபத்தில் மும்பைக்கு முகேஷ் அம்பானி வீட்டுக்கு சென்ற போது, தன் வீட்டு வேலைக்கார பெண்ணை, தெரியாமல் கேமரா முன் நின்றதால், ஓடு ஓடு என விரட்டினார்.

ஒரு வேலைக்கார பெண், தன் குடும்ப புகைப்படத்தில் இருக்கக் கூடாது என்று நினைக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான், நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன் என்று பாடுவதெல்லாம் வெறும் உடான்ஸ்தான்.

அதே போல் ரஜினி, கமலுக்குள் போட்டி இல்லை என்றாலும் ரஜினி படம் நன்றாக ஓடினால் கமலுக்கு விரக்தி ஏற்படும். கமல் படம் நன்றாக ஓடினால் ரஜினிக்கு எரிச்சலாகும் என்பதுதான் கசப்பான நிஜம்.

சினிமாவில் எப்படி நடிக்கிறார்களோ, அதே போல் சினிமா நிகழ்ச்சிகளிலும், பத்திரிகை பேட்டிகளிலும், டிவி சேனல் நேர்காணல்களிலும், ஒருவரை ஒருவர் புகழ்ந்துக்கொள்வர். ஆனால் உள்ளூர அவர்களுக்குள் எரிச்சல், புகைச்சல் எல்லாமே இருக்கும். இதை நடந்த ஒரு சம்பவம் மூலமாக அழகாக சொல்லி இருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்த படம் தசாவதாரம். இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். கமல் சினிமா பயணத்தில் இந்த படம் அதிக முக்கியத்துவம் பெற்ற மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது.

குறிப்பாக படத்தின் துவக்க காட்சியில், சைவம், வைணவம் பிரச்னையில் சிவன் பெரியவரா, பெருமாள் பெரியவரா என்ற மோதலில் குலோத்துங்க சோழ மன்னன், ரங்கராஜ நம்பியை பெருமாள் சிலையுடன் உயிருடன் கடலுக்குள் இறக்குவார். இதில் கல்லை மட்டும் கண்டால் பாடல், மிகப் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ்.. இயக்குனர் சிகரம் சொன்ன ஒரே வார்த்தை.. மிரண்டு போய் வாபஸ் பெற்ற ரஜினிகாந்த்..!

பிரமோசன் நிகழ்சசி

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு, தசாவதாரம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜாக்கிசான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த தமிழக முதல்வர் மு கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இப்படி ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து கொண்டாடிய தசாவதாரம் படத்தின் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் இடம்பெறவில்லை என்பதை பலரும் ஒரு குறையாக சுட்டிக் காட்டினார்கள்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறாமல் போனதற்கு முக்கிய காரணம் நடிகர் கமலஹாசன் தான் என்ற விபரத்தை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. அட இவரா இப்படி..? ரசிகர்கள் ஷாக்..

புகைப்படம்

முதன் முதலில் தசாவதாரம் படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்கான பத்திரிகையில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படத்துடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த கமல்ஹாசன் கடுப்பாகி இருக்கிறார்.

உடனே, அந்த அழைப்புகளின் டிசைன் மாற்றப்பட்டு ரஜினிகாந்தின் பெயரும் புகைப்படமும் நீக்கப்பட்டு இருக்கிறது.

புறக்கணிப்பு

அதன் பிறகு அந்த நிகழ்ச்சிக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன் என்று தெரிகிறது. இந்த விவரம் அறிந்த பிறகுதான், ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்திருக்கிறார் என்ற விவரத்தை பிரபல நடிகரும் சினிமா பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

பகைமை உணர்வு

தசாவதாரம் பட நிகழ்ச்சி அழைப்பிதழில், ரஜினி போட்டோவை பார்த்து கடுப்பான கமல்ஹாசன் குறித்தும், அவர்களுக்குள் இருக்கிற பகைமை உணர்வு குறித்தும் பகீர் ரகசியத்தை உடைத்திருக்கிறார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version