நான் ஸ்ரீவித்யாவை கல்யாணம் பண்ண முடியல.. காதல் பிரிவுக்கு இது தான் காரணம்.. ஓப்பனாக சொன்ன கமல்..!

நடிகர் கமல்ஹாசன், காதல் லீலைகளில் மன்மதன் என்பது தமிழ் சினிமா உலகம் மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களும் தமிழ்நாட்டு மக்களும் அறிந்த உண்மைதான். அவர் வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்தார்.

தொடர்ந்து குஜராத்தி நடிகை சரிகாவை திருமணம் செய்தார். அதன் பிறகு நடிகை கௌதமியுடன் 13 ஆண்டுகள் தாலி கட்டாமல் லிவிங் டூ ரிலேசன்ஷிப் வகையில் குடும்பம் நடத்தினார்.

அதுமட்டுமின்றி நடிகைகள் சிம்ரன், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோருடன் கமல்ஹாசனுக்கு மிக நெருக்கமான தொடர்பு உண்டு என்பது பலரும் அறிந்த உண்மைதான்.

ஸ்ரீவித்யா

ஆனால் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில், நடிகர் கமல்ஹாசன் மிக ஆழமாக நேசித்து காதல் கொண்ட நடிகை ஸ்ரீவித்யா.

நடிகை ஸ்ரீவித்யா உணர்ச்சிகள், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் கமல் நடித்த போது அவருடன் ஜோடியாக நடித்திருந்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த காதல் கைூடவில்லை.

கமல்ஹாசன்

சில ஆண்டுகளுக்கு முன், காபி வித் டிடி விஜய் டிவி ஒளிபரப்பில் கமல் பங்கேற்றபோது, ஸ்ரீவித்யாவுடன் கமல் நடித்த படங்களின் சில புகைப்படங்களை டிடி கமலின் முன்னால் வைத்து காட்டினார்.

தோழி இல்லை, காதலிதான்

அப்போது ஸ்ரீவித்யாவுடன் கமல் இருந்த புகைப்படங்களை பார்த்த கமல், இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட போது எனக்கு வயது 19தான். இந்த காலகட்டத்தில் என் திறமைகளை உணர்ந்து சொன்னவர், திறமையானவராக இருந்த ஸ்ரீவித்யா தான் என்று குறிப்பிட்டார்.

அப்போது குறிப்பிட்ட டிடி அன்பு தோழியா என்று கேட்க, தோழி எல்லாம் இல்லை. காதலிதான் இதுல எந்த சந்தேகமும் வேண்டாம் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகர் கமல்ஹாசன்.

ஆனால் எங்களுடைய காதல் கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏப்போதும் அந்த அன்பு இருக்கும் என்று கமல்ஹாசன் அப்போது குறிப்பிட்டு பேசினார்.

என் அம்மா மறுத்துவிட்டார்

அதேபோல் நடிகை ஸ்ரீவித்யா ஒரு நேர்காணலில் பேசியபோது, நாங்கள் இருவரும் காதலித்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகுக்கே தெரியும். ஆனால் ஒரு முறை என் அம்மா என்னையும் கமலஹாசனையும் அழைத்து உட்கார வைத்து பேசி, உங்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. வளரும் இந்த காலகட்டத்தில் திருமணம் செய்து, அதைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று, எங்கள் திருமணத்துக்கு மறுத்து விட்டார்.

இதனால் கமல்ஹாசன், கோபித்துக்கொண்டு எழுந்து போய் விட்டார். அதற்கு பிறகு என்னிடம் அவர் பேசவில்லை.

அதன் பிறகு அவர் வாணி கணபதியை அவர் திருமணம் செய்து கொண்ட செய்தியை அறிந்து நான் மிகவும் நொறுங்கி போய் விட்டேன் என்று அந்த நேர்காணலில் ஸ்ரீவித்யா கூறியிருந்தார்.

மதம் மாறி நடந்த திருமணம்

அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, ஜார்ஜ் என்பவரை ஸ்ரீவித்யா மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட ஸ்ரீவித்யாவுக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாத போதும், கணவர் ஜார்ஜின் கட்டாயத்தால் சினிமாவில் நடித்தார்.

அதன்பிறகு ஒரு கட்டத்தில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு, மீண்டும் சினிமா படங்களில் அம்மா, அக்கா கேரக்டர்களில் ஸ்ரீ வித்யா நடித்தார்.

புற்றுநோயால் மறைவு

அவர் ஒரு கட்டத்தில் ஸ்ரீவித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் 2006ம் ஆண்டில் உயிரிழந்தார்.

காதல் பிரிவுக்கு…

நான் ஸ்ரீவித்யாவை கல்யாணம் பண்ண முடியவில்லை. காதல் பிரிவுக்கு இருவருமே வளரும் காலகட்டத்தில் இருந்ததுதான் காரணம் என்று வெளிப்படையாக கமல் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version