அன்பே சிவம் கிளைமாக்ஸ்.. கடைசி நேரத்தில் கமல் செய்த வேலை.. எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு.. போட்டு உடைத்த சுந்தர் சி..!

நடிகர் கமல்ஹாசன் கலைஞானி என்ற பட்டம் பெற்றவர். அதற்கு காரணம், திரைத்துறையில் அனைத்து துறைகளிலும் அவர் அத்துப்படியாக இருப்பவர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், நடிப்பு, நடனம், தொழில்நுட்பம், படம் தயாரிப்பு என, கமலுக்கு எல்லாமே விரல் நுனியில் இருக்கிறது.

திரைத்துறையில் புதிய புதிய விஷயங்களை அடிக்கடி கற்றுக்கொண்டு தன்னை அப்டேட் செய்துக்கொண்டே இருக்கிறார்.

கமல்ஹாசன்

உலகின் எந்த மூலையில் திரைத்துறை சார்ந்த புதிய விஷயம், தொழில்நுட்பம் என்றாலும் உடனே தெரிந்துக்கொள்கிறார். முயன்று அதை கற்றுக்கொள்ளவும் செய்கிறார்.

திரைத்துறையில் நல்ல கலைஞனாக இருக்கும் கமல், தயாரிப்பாளராக பல படங்களில் வென்றிருக்கிறார். பல படங்களில் தோற்றும் இருக்கிறார்.

அதனால் இப்போது அவர் நடிக்க முடியாத படங்களில் சிம்பு, சிவகார்த்திகேயன் போன்றவர்களை நடிக்க வைத்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் அந்த படங்களை தயாரிக்கிறார்.

சுந்தர் சி

இயக்குநர் சுந்தர் சி காமெடி படங்களை எடுத்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எடுத்த படம்தான் அருணாசலம். இந்த படம் சூப்பராக ஓடியது. ரஜினிக்கு மாஸ் வெற்றியை கொடுத்தது.

அன்பே சிவம்

ஆனால் அதைத்தொடர்ந்து, சுந்தர் சி இயக்கிய படம் அன்பே சிவம். இது முற்றிலும் சுந்தர் சி படங்களில் இருந்து வேறுப்பட்டது. புதிய வித்யாசமான ஜானரில் இந்த படம் பயணித்தது. இந்த படத்தில், எந்த ஒரு காட்சியிலும் இயக்குநர் சுந்தர் சி தெரிய மாட்டார்.

இந்த படத்தில், கம்யூனிசம் பேசும் ஹீரோ கமல், பணக்கார தொழில் அதிபர் நாசர் மகளை காதலிப்பார். ஒரு கட்டத்தில் பஸ் விபத்தில் சிக்கி, கமல் மிக மோசமான தோற்றத்தில் மாறி விடுவார்.

அதே வேளையில் அந்த பஸ் விபத்துக்கு காரணமான நாயை, தன்னுடன் வைத்துக்கொண்டே பராமரிக்கவும் செய்வார் கமல்.

படத்தின் துவக்கத்தில் இருந்தே கமலுடன் சேர்ந்து பயணிக்கும் நடிகர் மாதவன்தான், கமலின் காதலி கிரணை கிளைமேக்ஸில் திருமணம் செய்துக்கொள்வார்.

இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன போது, மக்களால் வரவேற்கப்படவில்லை. ஆனால் இப்போது இந்த படத்தை பலரும் விரும்பி பார்க்கின்றனர். டிவி சேனலில், செல்போனில் இந்த படத்தை பலமுறை பார்த்து பார்த்து ரசிக்கின்றனர்.

கிளைமாக்ஸ்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அன்பே சிவம் படத்தின் இயக்குநர் சுந்தர் சி கூறியதாவது,

அன்பே சிவம் படத்திற்கு கிளைமாக்ஸ் காட்சியை வேறு மாதிரி திட்டமிட்டு வைத்திருந்தோம். ஆனால் நடிகர் கமலஹாசன் கடைசி நேரத்தில் கிளைமாக்ஸ்சில் நாம் ஏதேனும் மாற்றம் செய்யலாமா என்று என்னிடம் கேட்டால், எனக்கு பக்கென்னு ஆகிவிட்டது

ஏனென்றால் அந்த கிளைமாக்ஸ் சீனுக்கு ஏற்றார் போல பருவநிலை அந்த நேரத்தில் இருந்தது. கடுமையாக மழை கொட்டிக் கொண்டு இருந்தது.

திடீரென கிளைமாக்ஸ் மாற்றம் சொல்கிறார் என்று நான் பயந்து போனேன். இருந்தாலும் அவர் கூறியது போல் சில மாற்றங்களை செய்து கிளைமாக்ஸ் உருவாக்கினோம்.

வேதனைகள்தான் மிச்சம்

தியேட்டரில் ப்ரிவ்யூ ஷோவில் படம் பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக சென்றனர். அதன் பிறகு நல்ல படம் செய்திருக்கிறோம் சுந்தர் சி என்று கமல்ஹாசன் என்னை பாராட்டினார்.

ஆனால் அந்தப் படம், எனக்கு இயக்குனர் என்று அங்கீகாரத்தை கொடுக்கவில்லை அந்த படத்தினால் நான் ஒரு வருடம் எந்த வாய்ப்பும் இல்லாமல் தவித்தேன். அன்பே சிவம் படத்தினால் எனக்கு வேதனைகள் தான் மிச்சம்.

ஆனால் தற்பொழுது அன்பே சிவம் திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள் என்று பேசி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version