மிரண்டு போயிட்டேன்.. சீவலப்பேறி பாண்டி படத்தை பார்த்துட்டு கமல் சொன்ன வார்த்தை.. நெப்போலியன் டாக்..!

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்தவர் நெப்போலியன்.

இவர் நடிகர், அரசியல்வாதி இரண்டிலும் பிஸியாக இருந்து வந்தார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கும் இவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்படும்.

நடிகர் நெப்போலியன்:

அந்த வகையில் தமிழ் திரையுலகில் புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி கிட்டத்தட்ட இதுவரை 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து,

பெரும் புகழ் பெற்ற நடிகராக பார்க்கப்படுகிறார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த தசாவதாரம், விருமாண்டி, சுயம்வரம், தாயகம், கிழக்கு சீமையிலே, புது நெல்லு புது நாத்து,

சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெற்றி பெற்ற திரைப்படங்களாக பார்க்கப்பட்ட வருகிறது.

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நெப்போலியன் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு ஆடிய நடனம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்ற பாடலாக அமைந்தது.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வில்லனாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

நெப்போலியன் ஒவ்வொரு படத்திலும் தனது ரோல் மிகச்சிறப்பாக வரும் அளவுக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவார்.

விருதுகள் குவிந்த திரைப்படங்கள்:

அந்த வகையில் அவரின் நடிப்பில் வெளிவந்த எட்டுப்பட்டி ராசா என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக மாநில திரைப்பட விருது கிடைத்து விருது பெற்று கவுரவிக்கப்பட்டார்.

பின்னர் இவருக்கு கலிமாணி எம்ஜிஆர் உள்ளிட்ட விருதுகள் கிடைத்தது. குறிப்பிடத்தக்கது வயதாக திரைப்படத்தின் மார்க்கெட் கொஞ்சம் சரிய ஆரம்பித்தபோது அரசியலில் மும்முரம் காட்டி,

அதில் படு பிஸியாக இருந்து வந்த நடிகர் நெப்போலியன் அதன் பிறகு தனது மூத்த மகனான தனுஷுக்கு தசை சிதைவு என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அவரால் நடக்க முடியாமல்,

கை கால்கள் செயல் இழந்து போனதால் மகனின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று அவருக்கு தொடர்ந்து சிகிச்சை செலுத்த அங்கேயே குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.

அமெரிக்காவில் பணக்கார விவசாயி:

அமெரிக்காவில் ஐடி நிர்வாணம் ஒன்றை சொந்தமாக நடத்தி தொழிலதிபராகவும், பல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்தும் வருமானத்தை சம்பாதித்தும் வரும் நெப்போலியன் தனது குடும்பத்தோடு,

அங்கேயே வசித்து வருகிறார் இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் சமீபத்திய பேட்டி ஒன்றில்,

கமல் ஹாசன் தன்னுடைய நடிப்பை பார்த்து விழுந்து பாராட்டியது குறித்து மிகவும் பெருமையாக பேசி இருக்கிறார்.

சீவலப்பேரி படம் வெளியான பிறகு என்னை சந்தித்த கமல்ஹாசன் உங்களிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்று கூறினார்.

சொல்லுங்கள் சார் என்றேன் சீவலப்பேரி பாண்டியன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நான் தான். சில காரணங்களால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

சீவலப்பேரி பாண்டியன் கதையை நான் நன்கு அறிந்தவன் எனக்கு இந்த கதாபாத்திரம் செட் ஆகுமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் உங்களுக்கு இந்த கதாபாத்திரம் அற்புதமாக பொருந்தி இருந்தது. அருமையாக நடித்திருந்தீர்கள் என கூறினார்.

நடிப்பது பார்த்து மிரண்டுபோன கமல்:

என்னது கமலஹாசன் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடித்தேனா? என்று வியந்து போனேன் மிரண்டு போனேன்.

அதன்பிறகு சார் நான் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன் உங்களுடன் தான் நடிக்கவில்லை.

ஒரு வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் உங்களுடன் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது எனக்கு கூறினேன்.

அதை சொல்லி ஒரு சில வருடங்கள் கழித்து என்னுடைய அலுவலகத்திற்கு வாருங்கள் என்று கூறினார் அடுத்த பேச்சே பேசாமல் உடனடியாக அவருடைய அலுவலகத்திற்குச் சென்றேன்.

சென்றதும் படம் முழுதும் அவருடன் பயணிக்கும்படியான ஒரு கதாபாத்திரத்தை கூறினார் ஆனால் இந்த கதாபாத்திரம் வில்லன் போல இருக்கிறது என்று கூறினேன்.

வில்லன் கதாபாத்திரம் தான் நீங்கள் செய்தால் சிறப்பாக என்று நினைத்தேன் எனக்கு கூறினார் சரி என்று நடித்துக் கொடுத்தேன் அதுதான் விருமாண்டி என்றார் நெப்போலியன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version