BIGG BOSS புதிய PROMO..! கமல் தாக்கப்பட்டாரா..? கொதித்தெழுந்த இரண்டு நடிகைகள்..!

BIGG BOSS : பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிகர் கமலஹாசனுக்கு பயப்படுவது போல நடிகை விஜய் சேதுபதிக்கு பயப்படுவார்களா..? என்ற கேள்வி மிகப்பெரியதாக எழுந்திருக்கிறது.

இந்த கேள்விக்கான விடையை நடிகர் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகள் மூலம் தான் நம்மால் பார்க்க முடியும். அதுவரை காத்திருப்போம். இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் ப்ரோமோவில் நடிகர் கமலஹாசனை சீண்டும் விதமாகவே சில வசனங்கள் இருக்கின்றன.

குறிப்பாக வாழைக்காய் பஜ்ஜி போல வளவள என்று இல்லாமல் மிளகாய் பஜ்ஜி போல சுறுக்கென பேச வேண்டும் என்ற வசனமும்.. யாருக்கு என்ன கார்டு கொடுக்கணும் தெரியுமில்ல..? என்று ஒரு சிறுவன் விஜய் சேதுபதி இடம் கேட்கும் வசனமும் நடிகர் கமல்ஹாசனை நேரடியாக அட்டாக் செய்வது போன்று உணர்வு ஏற்படுவதாக சில ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சில பிக்பாஸ் சீசன் களில் சுறுக்கென எதுவும் பேசாமல்.. வள வளா.. கொள கொளாவென தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருந்தார் நடிகர் கமல்ஹாசன் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

போட்டிக்கு தேவையான விஷயங்களை தவிர்த்து விட்டு தேவையில்லாதவற்றை பேசிக் கொண்டிருந்தார். அதனை சுட்டிக்காட்டும் விதமாக வாழக்காய் பஜ்ஜி போல வளவளவென்று பேசக்கூடாது என வசனம் இடம் பெற்று இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அதேபோல யாருக்கு என்ன கார்டு கொடுக்கணும் தெரியுமில்ல என்று வசனம் மூலம் நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்த விஷயத்தின் போது எழுந்த எதிர்ப்பை சுட்டிக்காட்டும் விதமாக நடிகர் கமலஹாசன் அட்டாக் செய்யும் விதமாக இந்த வசனம் இடம் பெற்றிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

எது எப்படியோ இருக்கட்டும்.. நிகழ்ச்சியின் தொடக்கத்திற்காக ரசிகர்கள் உடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் இணையப் பக்கங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்களான நடிகை விசித்ரா மற்றும் மாயா இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

இதில் நடிகை விசித்திரா கூறியதாவது, நடிகர் கமலஹாசனுக்கு என்று ஒரு ஆளுமை இருக்கிறது.. அவருக்கென்று ஒரு அனுபவம் இருக்கிறது.. இயற்கையாகவே சினிமாவில் உள்ள அனைவருக்கும் கமல்ஹாசன் முன்பு சென்றாலே ஒரு விதமான நடுக்கம் இருக்கும்.. ஒரு பயம் இருக்கும்.. அந்த பயம் பிக் பாஸ் வீட்டிலிருந்த நடிகர்களுக்கு வருவதை இயல்பாக இருந்தது.

ஆனால், நடிகர் விஜய் சேதுபதி மீது அந்த பயம் வருமா..? என்ற கேள்வி இருக்கிறது. எப்படி பணியாற்றப் போகிறார் விஜய் சேதுபதி என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார் நடிகை விசித்ரா.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய போட்டியாளரான மாயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மைண்ட் கேம். அங்கு யாரும் தங்களுடைய உண்மையான முகத்தை காட்ட முடியாது. சில விஷயங்கள் கடைசி வரை ரகிசயமாகவே இருக்கும்.

அங்கு நடக்கக்கூடிய மைண்ட் கேமில் நீங்கள் சரியாக விளையாடி விட்டால் ஜெயித்து விடுவீர்கள். இல்லையென்றால் மாட்டிக் கொள்வீர்கள் என்று மேம்போக்காக ஒரு விஷயத்தை பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது இருக்கு வழக்கமான எதிர்பார்ப்பு இந்த சீசன் மீதும் இருக்கிறது. ஆனால் தொகுப்பாளர் விஜய் சேதுபதி என்பதால் அவர் எப்படி தன்னுடைய அவர் எப்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார். ஏழு சீசன்களாக கமல்ஹாசனை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் விஜய் சேதுபதியை ஏற்றுக் கொள்வார்களா..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version