10 நிமிஷ வேலைக்காக.. 3 மணி நேரம் கமல் செய்த செயலை பாருங்க..!

69 வயசு ஆகியும் தனது மார்க்கெட் இன்னும் குறையாமல் தொடர்ச்சியாக இளம் ஹீரோக்களுக்கு செம டெஃப் கொடுக்கும் வகையில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் நிறைந்த படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

தமிழ் சினிமாவின் வரலாற்று சிறப்புமிக்க திரைப்படங்களை இயக்கி பெரும் புகழ்பெற்று வரும் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் தக்லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் .

மணிரத்தினம் இயக்கத்தில் கமல் ஹாசன்:

இந்த திரைப்படம் கமல்ஹாசனின் 234 ஆவது திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் திரிஷா , ஜெயம் ரவி மற்றும் சிம்பு உள்ளிட்ட பலர் முக்கிய இடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் மிகப் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் அதே வேளையில் முன்னதாக இந்தியன் 2 திரைப்படம் தயாராகி தற்போது ரிலீஸிற்காக காத்திருக்கிறது .

அதை அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் ‘கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாக் அஸ்வின் இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி திரைப்படத்தில் நடிகர் ரானா ரகுபதி, கமல்ஹாசன் , அமிதாபச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘கல்கி 2898 ஏடி’ படத்தில் கமல்:

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தை கிட்டத்தட்ட ரூ. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது .

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் எகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த உடன் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு படத்தின் வேலைகள் சில பெண்டிங் இருந்ததால் மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது .

இப்படம் வருகிற ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இப்படத்தின் கடைசி கட்ட வேலையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்ட படத்திற்கு டப்பிங் பேசிய கமல்:

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய போர்ஷன் டப்பிங் பணிகளை முடிப்பதற்காக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விமான பயணம் செய்து. தன்னுடைய டப்பிங் வேலையை நிறைவு செய்து இருக்கிறார்.

இப்படத்தின் முதல் பாகத்தில் கமல்ஹாசன் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே வந்து போவார் என கூறப்படுகிறது.

இரண்டாம் பாகத்தில் அவருடைய காட்சிகள் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மாண்டமாக உருவாகப் போகும் இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனின் போர்ஷனை பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

கமல்ஹாசன் டப்பிங் பேசிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

தொடர்ந்து இப்படி கல்கி, இந்தியன் 2 என அடுத்தடுத்த திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கும் கமல்ஹாசன் இந்த ஆண்டு நட்சத்திர நடிகர் என்ற மார்க்கெட்டை பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருப்பதால் கமல்ஹாசன் திரை விமர்சகர்களால் அதிகம் பேசப்படுவார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version