இதுக்கு, நீங்க கேரளாவுக்கு அடி மாடா போகலாம் ஆண்டவரே..! – கமல்ஹாசன்-ஐ விளாசும் இணைய வாசிகள்..!

நடிகர் கமலஹாசனின் சமீபத்திய ட்விட்டர் பதிவை பார்த்த இணையவாசிகள் எங்களை எல்லாம் பார்த்தால் முட்டாள் போல தெரிகிறதா..? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

நடிகரும் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியின் நிறுவனமான கமல்ஹாசன் சென்னையில் பெய்து கொண்டிருக்கும் மழை அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷயங்கள் தான் மக்களின் இந்த கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்து விட்டது.

என்ன விஷயம்.. என்றால், கடந்த 2020 ஆம் ஆண்டு பெய்த மழையின் போது அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் விதமாக கடுமையாக சாடி இருந்த நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒன்னும் செய்ய முடியாது என்று பீடிகை போடும் விதமாக எழுதி உள்ள பதிவுதான் ரசிகர்களை பொதுமக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கின்றது.

இவ்வாறு கருத்து ஏதும் சொல்லாமல் இருந்திருந்தால் கூட இவருக்கு இவ்வளவு பெரிய கெட்ட பெயர் கிடைத்திருக்காது.

2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் பொழுது பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கமல்ஹாசன் எழுதியதாவது. ஒரு மணி நேர மழை… தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.. வடகிழக்கு பருவமழை.. வரட்டுமா என்று மிரட்டுகிறது.

கருணை மழையை சேகரிக்க நீர்நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடம் எதுவும் இல்லை வடிகால்கள் வாரப்படவில்லை என சகட்டுமேனிக்கு அப்போதைய ஆளும அரசன் அதிமுக அரசை துவம்சம் செய்திருந்தார் நடிகர் கமலஹாசன்.

ஆனால், தற்பொழுது திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து நடிகர் கமலஹாசன் பேசியுள்ள விஷயத்தையும் பாருங்கள். அரசு எவ்வளவுதான் முன்னெச்சையோடு செயல்பட்டாலும், இயற்கை சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரை தான் கட்டுப்படுத்த முடியும். இந்த தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து நாமும் செயல்பட வேண்டியது அவசியம்.. என்று நூதனமான ஒரு பதிவை எழுதி இருக்கிறார் கமல்ஹாசன்.

அரசு இயந்திரத்தோடு பொதுமக்கள் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதை கமலஹாசன் சொல்லித்தான் மக்களுக்கு தெரிய வேண்டுமா என்ன..? கிடையாது. எல்லா இயற்கை பேரிடர்களின் பொழுதும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் தங்களுடைய குற்றங்களை பாதுகாத்துக் கொள்ளவும் தானாகவே முன் வருவார்கள்.

யாரும் வெள்ளம் போய்க் கொண்டிருக்கும் பொழுது.. எனக்கு என்ன என்று இருக்கப் போவதில்லை.. ஆனால் நடிகர் கமலஹாசன் அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஒரு மாதிரியான கருத்தையும்.. தற்போது திமுக ஆட்சியில் வேறு மாதிரியான கருத்துகள் பதிவிட்டு இருக்கிறார்.. என்று ரசிகர்கள் பலரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மாயா, பூர்ணிமா ஆகியோருக்கு ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் நடிகர் கமலஹாசன். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முறையே சரி கிடையாது.. இவர் பேசுவது குழம்பியை குட்டையை மேலும் குழப்பும் விதமாக இருக்கிறதே தவிர ஒரு பிரச்சினையை தீர்க்கும் விதமாக இல்லை.

ஒரு சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சியை சரியாக நடத்த தெரியாதவர்.. எப்படி அரசியல் கட்சி நடத்த போகிறார்.. என்று விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்தும் தற்போது ஒரு கருத்தும் முன்வைத்து ரசிகர்கள் மத்தியில் மூக்குடைபட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

இது குறித்து ஏதேனும் விளக்கம் கொடுப்பாரா…? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam