திருடன் கையில சாவி…. ஆண்டவா வேற லெவலு.. – வெளியானது பத்தல பத்தல பாடல்..!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் முதல் பாடல் சற்று முன்பு வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சற்று முன்பு இந்த பாடல் வெளியானது வசூல்ராஜா படத்தில் இடம்பெற்றிருந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்ற பாடலின் தொனியில் இந்த பாடலும் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடலில் வலுவான கருத்துக்களை அசால்டாக பாடியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை திரையிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …