கீர்த்தி சுரேஷிற்காக கமல் செய்த வேற லெவல் Thug Life சம்பவம்.. என்ன ஆண்டவரே இப்படி பண்ணிட்டீங்க…!

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அசாத்தியமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் கீர்த்தி சுரேஷ் பற்றி உங்களுக்கு அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக களம் இறங்கினார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷின் குடும்பம் திரை துறையில் பணி செய்த முன் அனுபவத்தைக் கொண்டிருந்த காரணத்தால் சினிமாவில் களம் இறங்க எளிதாக இருந்ததை அடுத்து தமிழ் திரைப்படமான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் வாரிசு நடிகரான விக்ரம் பிரபு உடன் இணைந்து நடித்து அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து இவருக்கு பல தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

மகாநதி என்ற தெலுங்கு படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியைப் போல நடித்து தேசிய விருதை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள படத்தில் நடித்து ஏசியாநெட் விருதினை பெற்றவர்.

அப்படி என்ன ஆண்டவர் கீர்த்திக்கு சொன்னார்..

மேலும் இந்திய திரை உலகில் ஜாம்பவான் நடிகராக கருதப்படும் உலகநாயகன் கமலஹாசன் நடிகை கீர்த்தி பற்றி வேறு லெவலில் Thug Life சம்பவத்தை செய்துவிட்டார். இதனை அடுத்து கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அனைவரும் என்ன ஆண்டவரே இப்படி பண்ணிட்டீங்க.. என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷிடம் நீங்கள் எந்த வெளிநாட்டுக்கு செல்ல விருப்பப்படுகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பிய போது, அவர் நார்த் இந்தியாவிற்கு என்று பதில் அளித்திருக்கிறார்.

மேலும் நார்த் இந்தியா வெளிநாட்டில் இல்லை. இந்தியாவில் இருக்கிறது என்பது கூட இவருக்கு தெரியவில்லையா? என்று நமக்கே நினைக்கத் தோன்றுகிறது. இதனை அடுத்து தான் கமலஹாசன் விழா ஒன்றில் பேசும் போது கீர்த்தி சுரேஷை எல்லோரும் அழகாக இருக்கிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

அழகு என்பது முக்கியம் தான். ஆனால் அதை விட அறிவு முக்கியம் என்று பேசியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் அந்த Thug Life சம்பவத்தை இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வை அவர்கள் நண்பர்களின் மத்தியில் பெரிதாக பேசி வருவதோடு, கீர்த்தி சுரேஷ்-க்கு இப்படி ஒரு பெயர் ஏற்பட்டதே என்ற கவலையில் இருக்கிறார்கள்.

மேலும் இதைப்பற்றி பரபரப்பாக கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் பேசி வருவதால் இந்நிகழ்வானது பேசும் பொருளாக மாறிவிட்டதோடு, இனி எந்த அவையிலும் பேசும் போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பதில் அளிக்க வேண்டும் என்பதை இந்நிகழ்வு உணர்த்திவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.

எனவே இனியாவது முந்திரி கொட்டையை போல் அவசரப்படாமல் ஆழ்ந்து யோசித்து பதில் அளித்தால் இது போன்ற வேறு லெவல் சம்பவம் நடக்காது. ஆக இனியாவது ஜாக்கிரதையாக இருங்கள் என்று அவரது ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version