பிக்பாஸ்.. விலகினார் கமல்.. என்ன காரணம்..? அறிக்கையில் இதை கவனிச்சீங்களா..?

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சின்னத்திரையின் நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகும். பிக் பாஸ் முதல் சீசன் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொள்வதற்கும் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருவது உண்டு. ஏனெனில் கிட்டத்தட்ட 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும். அந்த 100 நாட்களும் அதில் பங்கேற்பவர்கள் செய்யும் விஷயங்கள் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடையும்.

இந்த ஒரு காரணத்தினாலேயே தொடர்ந்து பிக்பாஸில் பங்கு பெறுபவர்கள் எளிதாக பிரபலம் அடைய முடிகிறது. அதிகபட்சம் பிக்பாஸை முடித்துவிட்டு வெளியில் வரும் பொழுது அவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைப்பது உண்டு.

பிக்பாஸ் தமிழ்:

பிக்பாஸ் முதல் சீசன் முதலே அதில் கலந்து கொண்ட பலரும் இப்பொழுது பல துறைகளில் பெரிய இடத்தில் இருக்கின்றனர். உதாரணத்திற்கு நடிகர் கவின், நடிகர் ரியோ ராஜ் போன்றவர்கள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் பிக் பாஸில் கலந்து கொண்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள்தான்.

அதற்கு முன்பு அவர்கள் சீரியல் போன்ற வெவ்வேறு தளங்களில் இருந்ததாலும் அவர்களுக்கு பிக் பாஸ் கொடுத்த பிரபலத்தை வேற எதுவும் கொடுக்கவில்லை. இதனாலையே தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் போன வருடம் பிக்பாஸ் சீசன் 7 மிகவும் ஆரவாரமாகவே சென்றது. தற்சமயம் பிக் பாஸின் எட்டாவது சீசன் அடுத்து துவங்க இருக்கிறது. இந்த நிலையில் எல்லா வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் இந்த வருடல் அதிலிருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

அறிவிப்பு:

இந்த நிலையில் இந்த செய்தியை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக நடிகர் கமல்ஹாசனே வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது படங்களில் கால்ஷீட் மற்றும் கமிட்மெண்ட் அதிகமாக இருப்பதால் பிக் பாஸ் 8 இல் பங்கேற்க முடியவில்லை.

இருந்தாலும் பிக் பாஸ் குழுவினருக்கு என்னுடைய நன்றிகள் என்று கூறியிருக்கிறார். பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக எனக்கு அதிக அன்பை கொடுத்திருக்கிறீர்கள். தமிழிலேயே மிக சிறப்பான ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிதான் என்று கூறி இருக்கிறார் கமல்ஹாசன்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முடிவுகளை எடுக்கும் இடத்தில் எப்பொழுதும் கமல்ஹாசன்தான் இருப்பார். வார இறுதியில் அவர் எடுக்கும் சில முடிவுகள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் போது ஒவ்வொரு வருடமுமே அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் கமல்ஹாசன்.

இந்த ஒரு காரணத்தால் கூட அவர் பிக் பாஸில் இருந்து விலகி இருக்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்பதுதான் இப்பொழுது கேள்வியாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version