பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் மீது சமீப காலமாக சரமாரியான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனர்.
முக்கியமாக, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திறனை நடிகர் கமல்ஹாசன் இழந்துவிட்டார். அவர் அரசியல் கட்சி சார்பாக செயல்படுகிறார்.
சமீப காலமாக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசனின் நடவடிக்கைகள் இருக்கின்றன.
அந்த கட்சியின் கொள்கைகளை பின்பற்றுபவராக நடிகர் கமலஹாசன் நடந்து கொள்கிறார். ஒரு விஷயத்தில் அவருடைய நடுநிலைத் தன்மையை எதிர்பார்ப்பது கடினமாக இருக்கிறது.
பிக்பாஸ் என்பது ஒரு விளையாட்டு. அதனை விளையாட்டாக தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், அதில் நடிகர் கமலஹாசன் அரசியலை புகுத்தி பேசுவதும் எப்போது பார்த்தாலும் தன்னுடைய பெருமைகளை பேசுவதிலுமே நேரத்தை செலவிடுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை வாரம் முழுதும் பார்க்காத ரசிகர்கள் கூட வார இறுதி நாட்களில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இதற்கு முக்கிய காரணம் நடிகர் கமல்ஹாசனின் தொகுத்து வழங்கும் திறமை. ஆனால், தற்போது போட்டியாளர்களுடன் நடிகர் கமலஹாசனும் சேர்ந்து கொண்டு ரசிகர்களை ஏமாற்றுகிறார்.
அவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் தன்மை மாறிவிட்டது. சமீப காலமாக, மூளை குழம்பி நபர் போல செயல்படுகிறார். விட்டால் நமக்கும் மூளை குழம்பி விடும் போல தெரிகிறது.
அவர் ஏதோ ஒன்று மாசாக செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டு செய்கிறார். ஆனால் அவை ரசிகர்கள் மன்றத்தில் எடுபடவில்லை. கமல்ஹாசன் இதனை புரிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி விடுவது தான் நல்லது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் இந்த சீசனோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருக்கிறார் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
எனவே, நடிகர் சிம்புவை நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறது பிக்பாஸ் குழு என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் குழுவின் இந்த முடிவுக்கு குறித்து உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.