ஜீரண சக்தியை பெருக்கும் கமர்கட்டு மிட்டாய் செய்வது எப்படி..? – வாங்க பாக்கலாம்..!

கமர்கட்டு : தாத்தா, பாட்டி காலத்தில் செய்யப்பட்ட பலகாரங்கள் உடலுக்கு ஆரோக்கியமான பண்டமாக இருந்ததோடு மட்டுமல்லாமல்  அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பண்டமாக கமர் கட்டு மிட்டாய்  இருந்தது.

இவை சுவைக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. பொதுவாக கமர்கட்டுமிட்டாயை கடித்து சாப்பிடுவது முடியாத ஒரு காரியம்.

அதனை சப்பி சப்பி தான் சாப்பிடுவோம் எனவே அதன் மூலம் நாம் நாவில் இருக்கக்கூடிய அதிகப்படியான உமிழ்நீர் நம்முடைய வயிற்றுப் பகுதிக்கு செல்கிறது.

இதன் மூலம் நம்முடைய ஜீரண சக்தி என்று சொல்லக்கூடிய செரிமான சக்தி வலுவடைகிறது. மட்டுமில்லாமல் நாவில் இருக்கக்கூடிய சுவை நரம்புகள் சுத்தம் அடைகின்றன. இப்படி பல ஆரோக்கியம் சம்பந்தமான நற்பலன்களை கொண்டிருக்கும் இந்த கமர்கட்டுமிட்டாயை எப்படி செய்வது வாருங்கள் பார்க்கலாம்.

 சிறுவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய கமர் கட்டு  இன்று இருக்கும் தலைமுறையும் விரும்பி சாப்பிடக்கூடிய பண்டமாக உள்ளது. அந்த கமர்கட்டை எப்படி செய்வது என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

கம்மர் கட் செய்ய தேவையான பொருட்கள்:

1.அச்சு வெல்லம் அல்லது மண்டை வெல்லம் – கால் கிலோ

2. தேங்காய் துருவல் இரண்டு அல்லது மூன்று கப்

3. ஏலக்காய் – 5

4. நெய் – 100 கி அல்லது தேவையான அளவு

செய்முறை:

அச்சு வெல்லம் அல்லது மண்டை வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு நீரை விட்டு நன்றாக அது உருகும் வரை சூடாக்க வேண்டும்.

 இதனை அடுத்து இந்த வெல்லப்பாகு உருகி வந்தவுடன் வெள்ளைத்துணி அல்லது சல்லடையிலோ வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

துருவி வைத்துள்ள தேங்காய் துருவல் இரண்டு கப்பை கடாயில் விட்டு வதக்க வேண்டும். பின்னர் இந்த துருவலை வெல்லப்பாகு உடன் சேர்த்து போதுமான அளவு நன்றாக கிளற வேண்டும்.

தேங்காய் துருவலையும்,  வெல்லப்பாகும் ஒன்றாக நன்கு கலந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து சூடு குறைந்த உடன் கைகளில் தொடக்கூடிய சூட்டில் சிறிது நெய் சேர்த்து சிறு சிறு உருண்டை உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான கம்மர் கட்டு ரெடி. இதை ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டு குறைந்தபட்சம் ஒரு மாதம் முதல் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பண்டத்தில் அதிக அளவு வெல்லம் இருப்பதால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

மேலும் இந்த குறும்பண்டத்தை சாப்பிடும்போது இது பல்லில் ஒட்டிக் கொள்ளாது .எனவே பல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படும். எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பண்டங்களில் ஒன்றாக கமர்கட் திகழ்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam