“கோடையில் குளிர்ச்சி தரும் கம்மங்கூழ் ..!” – வீட்டில் செய்து அசத்துங்க..!!

கோடை வந்து விட்டாலே நமது உடல் சூடேறி பலவிதமான உபாதைகள் வருவதோடு அம்மை நோயின் தாக்குதலுக்கும் ஆளாகவும் செய்வோம். இந்த நோய்களின் தாக்குதல்களில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு உகந்த வழி தான் நம் முன்னோர்கள் பயன்படுத்திய தானியம் தான் கம்பு.

இது நம் உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும் என கூறலாம். அப்படிப்பட்ட கம்பிலிருந்து கம்மங் கூழ் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாமா.

கம்மங்கூழ் செய்ய தேவையான பொருட்கள்

1.சுத்தம் செய்யப்பட்ட கம்பு அரிசி அரை கிலோ

2.தேவையான அளவு உப்பு

3.இரண்டு கப் தயிர் சின்ன

4.வெங்காயம் 10

செய்முறை

 இன்று கடைகளில் இந்த கம்பரிசியானது கல் மற்றும் குரனை நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட வடிவில் கிடைக்கிறது. அந்த கம்பரிசியை நீங்கள் வாங்கி வந்து நன்கு கழிந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் உங்கள் குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஆறு விசில் வரை விட்டு விடுங்கள்.

பின்னர் குக்கரை திறந்து கம்பு அரிசி நன்கு வேந்திருக்கிறதா என்று பார்த்து விடுங்கள். அதனை அடுத்து நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தயிரை அதனோடு போட்டு சிறிதளவு நீரை விட்டு நன்கு கலக்கி விடுங்கள்.

பிறகு இதற்கு தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்தோடு வெட்டி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தையும் போட்டு சூடாகவோ அல்லது இளம் சூட்டிலோ பருக்கலாம்.

இதனை காலை நேரத்திலோ மதிய நேரத்திலோ உங்கள் வீட்டிலேயே செய்து நீங்கள் பருகி வருவதன் மூலம் இந்த கோடையினால் ஏற்படும் உஷ்ணத்தைத் தணித்து பல நோய்களிலிருந்து உங்களை காத்துக் கொள்ள முடியும்.

இந்த கம்பில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்க பழக்கி விட்டால் அவர்கள் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் அதிகளவு கிடைக்கும். மேலும் நா வறட்சியை தடுக்கக்கூடிய ஆற்றல் எந்த கூழ் – க்கு உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …