கனகாவின் இந்த நிலைக்கு காரணம்.. இந்த நடிகர் தான்..! போட்டு உடைத்த பிரபலம்..!

ஒரு சில படங்களில் நடித்தாலும், அட அந்த நடிகை மீண்டும் படங்களில் நடித்தால் நன்றாக இருக்குமே என்று, அந்த நடிகைகளின் மீது ரசிகர்களுக்கு ஒரு அபிமானம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு, சினிமாவில் நடிக்காமல் அப்படியே விலகிவிடுவார்கள். இது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தந்தாலும், அவர்கள் நடித்த பழைய படங்களை பார்த்தாவது அவ்வப்போது அவர்கள் அந்த நடிகையை நினைத்து சந்தோஷப்பட்டு கொள்வா்கள். அதைத்தவிர அந்த ரசிகர்களுக்கு வேறு வழியில்லை.

கரகாட்டக்காரன் கனகா

கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன் ஹீரோவாக நடித்த கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமானவர் நடிகை கனகா. நடிகை தேவிகா மகள். கனகா முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்பால், முத்திரை பதித்தார்.

கரகாட்டக்காரன் படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில், வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படம் சில தியேட்டர்களில் 365 நாட்கள் ஓடியது. சில தியேட்டர்களில் 200 நாட்கள், பல தியேட்டர்களில் 175 நாட்கள், 155 நாட்கள் மற்றும் 100 நாட்கள் என மிக அதிக நாட்கள் ஓடியது.

இளையராஜா இசையில்…

இளையராஜாவின் இசையில் தேன் மதுர பாடல்கள், இசை, கவுண்டமணி செந்தில் காமெடி, சண்முகசுந்தரம், வடிவுக்கரசி, கோவை சரளா, சந்திரசேகர், சந்தானபாரதி போன்றவர்களின் நடிப்பால் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக, கோலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கியது.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகை கனகா தங்கமான ராசா, கும்பக்கரை தங்கையா, அதிசய பிறவி, விரலுக்கேத்த வீக்கம், பெரிய குடும்பம், சாமுண்டி, சிம்மராசி, கோவில் காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தனது பங்களாவில் தனிமையில்…

குறிப்பாக ரஜினிகாந்த் உடன் அதிசய பிறவி, விஜயகாந்த் உடன் கோவில் காளை, சரத்குமாருடன் சாமுண்டி, பிரபுவுடன் பெரிய குடும்பம், கும்பக்கரை தங்கையா போன்ற படங்களில் நடித்த கனகா, கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது பங்களாவில் தனிமையில் வசித்து வருகிறார். இப்படி இவர் தனிமையில் ரசித்து வசித்து வர காரணம், அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. காதலில் தோல்வி, அப்பாவுடன் சொத்து பிரச்சனை, அம்மாவின் மறைவு என்று பல விஷயங்களால் அவர் மிகவும் மனம் வாடிய நிலையில் காணப்படுகிறார்.

சரத்குமார்

இந்நிலையில் சாமுண்டி படத்தில் கனகாவுடன் நடித்த நடிகர் சரத்குமார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசும்போது கனகா குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சரத்குமார் கூறுகையில், கனகா மிகச்சிறந்த உழைப்பாளி. சினிமா மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார். ஆனால், அவர் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்த சில சோகங்களால் அவர் மனித வாடையே கூடாது என்று எண்ணும் அளவுக்கு ஒதுங்கி இருக்கிறார்.

துரோகங்களால்…

அவருக்கு சிலர் செய்த துரோகங்களால், அவர்கள் தந்த துயரங்களால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி, யாரையும் சந்திக்காத நிலையில் இப்போது இருந்து வருகிறார்.

கடுமையான மன அழுத்தம்

அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக மோசமான சம்பவங்களால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம், தனிமையில் இருந்து கொண்டு மற்றவர்கள் அவருக்கு செய்த துரோகங்களை நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்.

யாரையுமே சந்திக்காமல்…

அதனால்தான் யாரையும் சந்திக்க விரும்பாமல் அவர் தனிமையில் தனிமையில் யாரையும் சந்திக்க விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறி இருக்கிறார் நடிகர் சரத்குமார்.

கனகாவின் இந்த நிலைக்கு காரணம், மற்றவர்கள் அவருக்கு செய்த துரோகங்கள்தான் என போட்டு உடைத்திருக்கிறார் நடிகர் சரத்குமார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version