குறிப்பிட்ட சில நடிகைகள், நடிகர்கள் தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நீடித்திருக்க வேண்டியவர்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் துரதிஷ்டவசமாக அவர்கள் சினிமாவை விட்டு விலகிப் போய்விட நேரிடுகிறது.
அப்படி பல நல்ல நடிகர், நடிகைகளை தமிழ் சினிமா இழந்திருக்கிறது. அதற்கு காரணங்கள் பல இருந்தாலும், இது ரசிகர்களை பொறுத்தவரை பலத்த ஏமாற்றம்தான். இது ஒருவிதத்தில் தமிழ் சினிமாவுக்கு பலத்த இழப்பு என்று கூட கூறலாம்.
கனகா
நடிகை கனகா, பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். இவர் கரகாட்டக்காரன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன் ஜோடியாக கனகா இந்த படத்தில் அறிமுகமானார். சூப்பர் டூப்பர் ஹிட் படமாக, இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதிசய பிறவி
அதன்பிறகு கடந்த முன்னணி நடிகையாக வலம் வந்த கனகா, முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ்நாடு முழுவதும் தேவிகாவின் மகள் கனகா என்று அறியப்பட்டார். அதன் பிறகு ரஜினி நடித்த அதிசய பிறவி என்ற படத்தில் கனகா நடித்தார். விஜயகாந்த் நடித்த கோவில் காளை, மீண்டும் இராமராஜனுடன் தங்கமான ராசா, சரத்குமாருடன் சாமுண்டி, சிம்ம ராசி, பிரபுவுடன் தாலாட்டு கேக்குதம்மா போன்ற படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கிக் கொண்டார். மக்கள் பார்வையில் இருந்து காணாமல் போய்விட்டார்.
தனிமையில்
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் யாரையும் சந்திப்பதில்லை. வெளியில் வந்து யாரையும் பார்ப்பதும் இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி, கனகாவின் வீட்டுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து, அவரை பார்த்து பேசி விட்டு வந்திருக்கிறார்.
குடும்ப பட இயக்குனர் வி சேகர்
தமிழ் சினிமாவில் நிறைய குடும்ப படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றனர் இயக்குனர் வி சேகர். அவர் நடிகை கனகா குறித்து சில விஷயங்களை பேசி பேசி இருக்கிறார்.
விரலுக்கேத்த வீக்கம் என்ற படத்தை இயக்கிய வி சேகர், அந்த படத்தில் நடித்த கனகா குறித்து சில தகவல்களை கூறியிருக்கிறார்.
விரலுக்கேத்த வீக்கம்
வி சேகர் கூறியதாவது, விரலுக்கேத்த வீக்கம் படத்தை தொடங்கிய போது வடிவேலுவுக்கு கோவை சரளா ஜோடியாக பிக்ஸ் செய்தோம். அதேபோல் விவேக்குக்கு கனகாவை ஜோடியாக போடலாம் என்று எனது அசிஸ்டன்டுகள் யோசனை கூறினார்கள்.
விவேக் ஜோடியாக…
ஆனால் எனக்கு தயக்கமாக இருந்தது. ஏனெனில் கனகா மிகப்பெரிய ஹீரோயின். அவரை எப்படி விவேக் ஜோடியாக நடிக்க வைப்பது என்று யோசித்தேன்.
என்றாலும் எனது மேனேஜர் கனகாவின் தாய் தேவிகாவை தொடர்பு கொண்டார். அவர் கனகா ஹீரோயின் என்றதும் மற்ற விஷயங்களை பேசத் தொடங்கினார்.
அதெல்லாம் முடியாது
அப்போது விவேக் ஜோடியாக கனகாவை பிக்ஸ் செய்துள்ளோம் என்று சொல்ல அதிர்ச்சியான கனகாவும் அவர் தாயும், என்னது விவேக் ஜோடியா, என்ன விளையாடுறீங்களா, அதெல்லாம் முடியாது என்று சொன்னார்கள்.
பிறகு எப்படியோ பேசி கனகாவை சம்மதிக்க வைத்து விட்டோம் என்று கூறியிருக்கிறார் டைரக்டர் வி சேகர். ஆனால் அந்த படத்தில் விவேக் – கனகா காட்சிகள் மிகவும் அருமையான ரசிக்க கூடிய காட்சிகளாக இன்றும் ரசிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
என்னது.. நான் விவேக்குக்கு ஜோடியா.. ஜெர்க் ஆன கனகாவை எப்படியோ சமாதானப்படுத்தி பேசி, விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வி சேகர்.