ஹோட்டலில் நடந்த அந்த விஷயம்.. உயிர் பிழைச்சதே பெருசு.. ரஜினியின் ரகசியத்தை உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இப்பொழுது மக்கள் மத்தியில் பெரிதாக ப்ளாக் மார்க் என்பதை இல்லாத ஒரு நடிகராக இருந்தாலும் கூட சினிமாவிற்கு வந்த சில காலங்களிலேயே ரஜினி மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது.

அதுவும் திருமணத்திற்கு முன்பு அவரை குறித்து நிறைய கிசுகிசுக்கள் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தன. அப்போதைய காலகட்டங்களில் ரஜினி ஒரு சர்ச்சையான நடிகராக இருந்து வந்தார். மேலும் அவருக்கு மது அருந்தும் பழக்கமும் அப்பொழுது அதிகமாக இருந்தது.

ஹோட்டலில் நடந்த அந்த விஷயம்

ஆனால் அவற்றை எல்லாம் கைவிட்டு இப்பொழுது ஒரு சர்ச்சையே இல்லாத நடிகராக ரஜினி இருந்து வருகிறார். இந்த நிலையில் அந்த காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளை சினிமா பிரபலம் காந்தராஜ் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது ரஜினி ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகளை செய்திருக்கிறார். காதல் தொடர்பாக நிறைய சிக்கல்களிலும் ஈடுபட்டு இருக்கிறார் ரஜினி. கருப்பான நிறத்தில் இருப்பதால் வெள்ளையான ஒரு பெண்ணைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.

உயிர் பிழைச்சதே பெருசு

இதனாலேயே ஆரம்பத்திலிருந்து ஏதாவது ஒரு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ரஜினியின் ஆசையாக இருந்தது. அதனை தொடர்ந்து ஒரு நடிகையின் மீது காதல் கொண்டார்.

அதற்கு பிறகு அது பெரிய பிரச்சனையில் போய் முடிந்தது. ஆனால் அதற்குப் பிறகும் அவர் இந்த நடிகைகளை காதலிப்பது என்பதை விடவில்லை. இப்படி ஒரு முறை ஒரு பிரபல நடிகரின் காதலியை ரஜினியும் காதலித்து விட்டார் இந்த நிலையில் இந்த விஷயம் அந்த நபருக்கு தெரிந்து போகவே அவர் கோயம்புத்தூரில் ஒரு அறை எடுத்து அங்கு ரஜினியை வர வைத்தார்.

ரஜினியின் ரகசியத்தை உடைத்த பிரபலம்

ரஜினி வந்த பிறகு அவர் அங்கு மிகக் கடுமையாக ரஜினியை தாக்க துவங்கினார். அந்த தாக்குதலில் இருந்து ரஜினி உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம் என்று கூறலாம். அந்த அளவிற்கு வன்முறையாக அந்த தாக்குதல் நடந்தது.

அதற்குப் பிறகுதான் அவர் சினிமா நடிகைகள் வேண்டாம் என்று முடிவுக்கு வந்தார் அதற்கு பிறகு சில காலங்கள் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருந்தார் ரஜினி என்று அந்த நிகழ்வுகளை தனது பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் காந்தராஜ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version