Site icon Tamizhakam

நடிகைகள் நைட் பார்ட்டிக்கு போறதே இதுக்கு தான்.. லிஸ்ட் போட்ட பிரபலம்..!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் விவாகரத்து என்பது அதிகரித்துக் கொண்டு வருகிறது. எதனால் இந்த விவாகரத்து ஏற்படுகிறது என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதுவும் இந்த வருடம் மிகவும் அதிகமாக விவாகரத்துகள் நடந்து வருகிறது.

தனுஷ் மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா ரஜினிகாந்த் இவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து நடப்பது குறித்து பேச்சுக்கள் இருந்து வந்தன. அதேபோல அடுத்ததாக ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவருக்கும் இடையே விவாகரத்து நடப்பதாகவும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

விவாகரத்து பிரச்சனைகள்:

முன்பை விட இப்பொழுது இருவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகிறதோ என்பதுதான் இது குறித்து தற்சமயம் பேச்சாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே சுச்சிலிக்ஸ் என்கிற பெயரில் பாடகி சுசித்ராவும் பல தகவல்களை வெளியிட்டிருந்தார் அதுவும் அதிக பிரபலமாகி வந்தது.

தமிழ் திரை பிரபலங்கள் பலரை குறித்தும் அதில் பேசியிருந்தார் பாடகி சுசித்ரா. முக்கியமாக இரவு பார்ட்டி என்கிற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியங்களை அவர் கூறியிருந்தார். மிகவும் மோசமாக அவர்கள் என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்கிறார்கள் என்றும் ஒரு பக்கம் பேசியிருந்தார்.

இதற்கு நடுவே சமீப காலமாக ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையே விவாகரத்து ஆகப் போகிறது என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகிறது. அதிகமான நபர்கள் இது குறித்து பேசும் பொழுது இதற்கு இரவு பார்ட்டி ஒரு வகையில் முக்கிய காரணம் என்று கூறுகின்றனர்.

பார்ட்டி காரணமா?

ஏனெனில் நடிகர்களின் மனைவிகள் வேறு நடிகைகளுடன் பழக்கத்திற்கு உள்ளாகும் பொழுது அவர்களும் இந்த இரவு பார்ட்டிகளுக்கு எல்லாம் செல்கிறார்கள். இது நடிகர்களுக்கு பிடிப்பது கிடையாது. இதனால் அவர்கள் தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்கின்றனர் என்று ஒரு பக்கம் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து பிரபல சினிமா விமர்சகருடம். அரசியல் விமர்சகருமான டாக்டர் காந்தராஜ் பேசும்பொழுது நடிகர் நடிகைகளுக்கு இடையே விவாகரத்து நடப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதற்கு நிறைய முக்கிய காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் இரவு நேர பார்ட்டிகள் மட்டும்தான் அதற்கான காரணம் என்று நாம் கூறி விட முடியாது. ஏனெனில் சினிமா துறையை பொருத்தவரை பல காலங்களாக இரவு நேர பார்ட்டி என்பது நடந்து வருகிறது. மேலும் அந்த மாதிரியான விஷயங்களுக்காகதான் இரவுநேர பார்ட்டிகளே நடத்தப்படுகிறது.

அதெல்லாம் இல்லை என்றால் அப்புறம் எதற்கு இரவில் பார்ட்டிநடத்த வேண்டும் என்று பொடி வைத்து பேசி உள்ளார் சிவா. எனவே திரை பிரபலங்களுக்கே இரவு நேர பார்ட்டி என்றால் என்னவென்று தெரியும் பொழுது அவர்கள் மனைவிக்கு தெரியாமல் இருக்குமா எனவே அதெல்லாம் விவாகரத்துக்கு காரணமாக இருக்காது என்கிறார் காந்தாராஜ்.

Exit mobile version