என் மார்பகம் பெரிதாக காரணம் இது தான்.. கோபத்தில் கொப்பளித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா..!

நடிகை கனிகா சமீபத்திய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் தான் எதிர்கொள்ளக்கூடிய மோசமான கமெண்ட்டுகள் பற்றியும் தன்னுடைய முன்னழகு எதனால் பெரிதானது என்பது பற்றியும் கோபம் கொப்பளிக்க சில விஷயங்களை கூச்சமின்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நடிகை கனிகா இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப், வரலாறு, ஓ காதல் கண்மணி, யாதும் ஊரே யாவரும் கேளிர், வெப்பன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் விரல் விட்டு எண்ணும் அளவிலான படத்தில் தான் நடித்திருக்கிறார் நடிகை கனிகா என்றாலும் கூட நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்திருக்கிறார்.

தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஈஸ்வரி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கனிகாவிடம் சமூக வலைதளங்களில் உங்களை பற்றியும் உங்களுடைய தோற்றம் பற்றியும் வரக்கூடிய மோசமான கருத்துக்கள் பற்றி உங்களுடைய பார்வை என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை கனிகா சமூக வலைத்தளங்களில் பலரும் என்னுடைய முன்னழகு பற்றி தான் மோசமான முறையில் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். உங்களுடைய முன்னுழகு பெரிதாக இருக்கிறது. உங்களுடைய உடலுக்கும் உங்களுடைய முன்னழகின் அளவுக்கும் சம்பந்தமே இல்லை என்றெல்லாம் கூட கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

எனக்கு ஒன்று புரியவில்லை.. எதற்காக இப்படி கமெண்ட் செய்ய வேண்டும்..? உங்கள் வீட்டுப் பெண்களிடம் இருக்கக்கூடிய அதே விஷயம்தான் என்னிடமும் இருக்கிறது. இதில் ஏதேனும் புதிதாக இருக்கிறதா..? எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய மார்பகம் பெரிதாக இருப்பதற்கு காரணம் என்னுடைய ஹார்மோன் மாற்றங்கள் தான்.

நான் திருமணம் செய்து கொண்டேன்.. கர்ப்பமாக இருந்தேன்.. குழந்தை பெற்று இருக்கிறேன். குழந்தைக்கு பாலூட்டி இருக்கிறேன்.. எனக்கு மட்டுமல்ல பொதுவாக அனைத்து பெண்களின் வாழ்க்கையில் கண்டிப்பாக இருக்கும்.

அப்போது சில பெண்களுக்கு பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றது. அதனால் தான் என்னுடைய மார்பகங்கள் பெரிதாக இருக்கிறது. இதை அருவருப்பான வார்த்தைகளை கொண்டு கமெண்ட் செய்யும்பொழுது அவர்கள் என்ன மன நிலையில் இருக்கிறார்கள் என்று யோசிக்க தோன்றும்.

சில பேர் குழந்தை பிறந்த பிறகு இப்படியான கவர்ச்சியான ஆடைகளை நீ வேண்டுமா…? என்று கேட்கிறார்கள். எனக்கு பிடித்த ஆடைகளை அணியும் சுதந்திரம் எனக்கு உள்ளது. என்ன ஆடை அணிந்தாலும் அதனை எப்படி பார்க்க வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.

கண்டிப்பாக என்னுடைய மகனுக்கு பெண்களை எப்படி பார்க்க வேண்டும்.. என்று சொல்லிக் கொடுத்துதான் வளர்ப்பேன் என கூறியுள்ளார் நடிகை கனிகா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam