இதற்கான ரூட்டு விஜய்க்கு தெரிஞ்சிருக்கு… மேடையில் ஓப்பனாக பேசிய MP கனிமொழி..!

தமிழக அரசியல் களத்தில் விஜய் களம் இறங்கியது முதல் அது குறித்து எதிர்பார்ப்புகள் என்பது அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து விஜய் அடுத்து என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று அரசியல் பிரமுகர்களும் ரசிகர்களும் கண்காணித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த வருட துவக்கத்தில் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். அது முதலே விஜய் அரசியலில் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்கிற பேச்சு இருந்து வருகிறது. இதற்கு நடுவே அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க போவதில்லை.

விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல் வரைதான் திரைப்படங்களில் நடிப்பதாகவும் அதற்குப் பிறகு மொத்தமாக திரை துறையை விட்டு விஜய் விலக இருப்பதாகவும் கூறப்பட்டது. இது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தாலும் அரசியல் தலைவராக விஜய் என்ன செய்யப் போகிறார் என்பது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் விஷயமாக இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல அரசியல் கட்சி துவங்கிய பிறகு சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் விஜய்.

MP கனிமொழி

அதே மாதிரி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது மரியாதை செய்வது போன்றவற்றையும் விஜய் செய்து வருகிறார்.

இதனாலேயே மக்களும் விஜய்யை அதிகமாக நம்பத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் விஜய் அடுத்து இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார். கோட் திரைப்படத்திற்கு பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பார்.

அதற்கு பிறகு அவர் திரைப்படத்தில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே இந்த இரண்டு திரைப்படங்களும் விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ரூட்டு

இந்த நிலையில் 2026 அரசியல் களம் எப்படி இருப்பது இருக்கும் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மூத்த அரசியல்வாதியான கனிமொழியிடம் விஜய் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

நடிகர் விஜய் தற்சமயம் அரசியலுக்கு வந்திருக்கிறார் ஒரு மூத்த அரசியல்வாதியாக அவருக்கு நீங்கள் என்ன அட்வைஸ் என நினைக்கிறேன் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கனிமொழி விஜய் சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை தொடுவதற்கு கடினமான முயற்சியை மேற்கொண்டு வந்திருக்கிறார் .

அதே கடின உழைப்பை அவர் அரசியலிலும் காட்ட வேண்டும் என்பதுதான் நான் வழங்கும் அறிவுரை என்று கூறியிருக்கிறார் கனிமொழி இந்த நிலையில் அந்த பேட்டி வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version