பருத்திவீரன் முதலில் ஹீரோவா நடிக்க இருந்தது அவரு.. இப்படித்தான் கார்த்தி உள்ள வந்தான்.. – கஞ்சா கறுப்பு ஷாக் தகவல்..!

பருத்திவீரன் சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் தற்பொழுது தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் மற்றும் கொடுமைகளை பகிர தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில், பருத்தி வீரன் திரைப்படத்தில் டக்ளஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் கஞ்சா கறுப்பு. இந்த படத்தில் இருந்த காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை கவரும் விதமாக அதற்கு முக்கியமான காரணம் நடிகர் கஞ்சா கருப்பு என்று கூறலாம்.

இப்படி பருத்திவீரன் குறித்து பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் கஞ்சா கருப்புவிடம் மைக்கை நீட்டி இருக்கிறார்கள். இணைய ஊடகங்கள் சில அப்போது பேசிய கஞ்சா கருப்பு பருத்திவீரன் படம் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறியது இருப்பதாவது, பருத்திவீரன் படத்தை தயாரித்தது அமீர் தான். அவர்தான் தன்னுடைய நண்பர்களிடம் தெரிந்தவர்களிடம் பணத்தை கடனாக படம் பெற்று படத்தை இயக்கி முடித்தார்.

பருத்திவீரன் திரைப்படம் கார்த்தி-யாழ் வெற்றி பெறவில்லை. பருத்திவீரன் திரைப்படத்தால் கார்த்தி தான் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த படத்திலிருந்து முத்தழகு, டக்லஸ், சித்தப்பு, பொணந்தின்னி போன்ற கதாபாத்திரங்கள் இல்லை என்றால் அந்த படம் எங்கிருந்து வந்திருக்கும்.

இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் நடிகர் கார்த்தியின் முகத்தை பார்த்தோ.. அல்லது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா-வை பார்த்தோ வரவில்லை. அனைவரும் இது அமீரின் படம் என்பதாலும் அவர் மீது இருந்த நம்பிக்கையால் மட்டும் தான் இந்த படத்தில் நடித்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால் பருத்திவீரன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா தான் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. அதற்காக நடிகர் சூர்யா ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் கடைசியாக இந்த படத்தை தன்னுடைய தம்பிக்கு கொடுத்து விட்டார்.

இப்படித்தான் கார்த்தி இந்த படத்துக்குள் ஹீரோவாக வந்தான். இந்த ரகசியம் எனக்கு மட்டும்தான் தெரியும். பலருக்கு படத்தில் நடித்த பலருக்குமே தெரியாது. கார்த்தி என்பவன் இந்த படத்தில் நடிக்கும் பொழுது ஒன்றுமே இல்லை.

யாருக்கும் இவர் யார் என்று தெரியாது. அப்போதுதான் சினிமா துறைக்குள் நுழைகிறா. நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. அமீரிடம் சொல்லுங்க அண்ணா.. சரிங்க அண்ணா என கூல கும்புடு போட்டுக்கிட்டு இருந்ததை நான் எத்தனையோ முறை பார்த்துள்ளேன்..

அப்படி இருக்கும் ஒருவரை ஒரு நல்ல நடிகனாக்கி தன்னுடைய உடல் மொழி அசைவுகள் அனைத்தையும் கார்த்திக்கு கடனாக கொடுத்து கார்த்தி-யை ஒரு பெரிய நடிகன் ஆக்கிவிட்டு தான் கடன்காரனாக வெளியே வந்துவிட்டார் அமீர்.

ஆனால் தற்போது அவருக்கு திருட்டு பட்டம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் தவறு என ஞானவேல் ராஜா மற்றும் சூர்யா, சிவகுமார் குடும்பத்தை கிழிகிழி என கிழித்துள்ளார் நடிகர் கஞ்சா கறுப்பு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam