சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் கண்மணி மனோகரனா இது..?- வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை கண்மணி மனோகரன் : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா என்ற சீரியல் ரசிகர்களுக்கு பலருக்கும் பிடித்த ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் விருப்பமான தொடராக இருக்கும் இந்த சீரியல் கிருஷ்ணகோலி என்ற பெங்காலி சீரியலின் ரீமேக் ஆகும்.

இந்த சீரியலில் அருண்பிரசாத், உஷாதேவி ஆசாத் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் அறிமுகமாகி தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை கண்மணி மனோகரன் என்கிற ஸ்வீட்டி.

இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் தன்னை பிரபலமாகி கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் முதன்மை கேரக்டரான கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தின் தங்கையாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றார் கண்மணி மனோகரன்.

தொடக்கத்தில் கண்ணம்மாவுக்கு எதிரான வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் அதன்பிறகு தனது அக்காவை புரிந்து கொண்டு மனம் திருந்தி நடந்து கொள்பவராக நடித்திருந்தார். தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மீண்டும் இன்னொரு ப்ராஜெக்ட்தில் சந்திப்போம் என்று ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். சிறுவயதில் இருந்து எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையும் கிடையாது ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு ஆசை இருந்தது. என் வாழ்க்கையில் இது தான் நடக்க வேண்டும் நான் இதுவாகத்தான் ஆகவேண்டும் என்ற எந்த ஒரு முடிவையும் நான் எடுத்தது கிடையாது.

காலம் போன போக்கில் பயணித்துக் கொண்டு இருந்தேன் மாடலிங்கில் நான் முயற்சி செய்து கொண்டிருந்த பொழுது நடிப்பதற்காக ஸ்டேஷனுக்கு வரச் சொன்னார்கள். அப்படி கிடைத்த வாய்ப்புதான் பாரதிகண்ணம்மா.

முதல் ஆடிஷனிலேயே தேர்வாகி விட்டேன். சீரியலில் பாஸிட்டிவ் நெகட்டிவ் என்ற எல்லாம் எனக்கு தெரியாது. இயக்குனர் என்ன சொல்கிறாரோ..? அதனை நடித்து கொடுப்பது தான் எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் மெய்மறந்து அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …