ஹாலிவுட் நடிகையான கரிஷ்மா கபூர், கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கரீனா கபூரின் சகோதரியாவர். 1990-களில் மிக முக்கியமான நடிகையாக இருந்தவர் கரிஷ்மா கபூர் தற்போதும் பல படங்களில் ஆக்டிவாக நடித்து வருகிறார்.
சினிமாவில் படு பிஸியாக இவர் நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் கிசுகிசுக்கள் இவரை சுற்றி அதிக அளவு வந்தது. ஆரம்ப நாட்களில் இவர் தனக்கு ஜிகர் படத்தில் ஜோடியாக நடித்த அஜய் தேவ்கானுடன் டேட்டிங்கில் இருந்ததாக செய்திகள் வெளிவந்தது.
இதனை அடுத்து இவர் அமிதாப் பச்சனின் மகனாகிய அபிஷேக் பச்சனை காதலித்து வந்தார். மேலும் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமணம் நடைபெறாமல் திடீரென்று தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கான காரணம் என்ன என்பதை இதுவரையில் வெளிவராமல் உள்ளது.
இதனை அடுத்து இவர் 2013 ஆம் ஆண்டு சஞ்சய் கபூர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.
இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 2014 ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற கருத்துக்கள் வெளிவந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்தை பெற்றார்கள்.
தற்போது இவர் சல்மான் கானின் அறக்கட்டளையில் முக்கிய நபராக அங்கம் வகித்து வருகிறார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தனது கடந்த திருமண வாழ்க்கை குறித்து பல தினத்திலும் தகவல்களை கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் செய்தியாளர்கள் மத்தியிலும் ஆழ்ந்த சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் செய்வதற்கு முன்பு கரிஷ்மாவின் மாமியார் அவருக்கு ஒரு டிரெஸ்ஸை பரிசாக அளித்துள்ளார்கள். இந்த டிரஸ்சை குழந்தை பிறந்த பிறகு ஒருநாள் கரிஷ்மாவின் கணவர் சஞ்சய் கபூர் அதை அணியக் கூறி இருக்கிறார்.
ஆனால் அந்த உடை அவருக்கு பிட்டாகவில்லை இதற்கு காரணம் குழந்தை பிறந்த பிறகு இவர் உடல் எடை கூடி விட்டதால் அந்த உடையை அணிய முடியவில்லை. இதனை அடுத்து அந்த உடை மிகவும் டைட்டாக இருந்த காரணத்தினால் அதை அணிய கரிஷ்மா மறுத்ததின் காரணமாக கடுப்பான அவரது கணவர் கரிஷ்மாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து உள்ளார்.
அத்தோடு நின்றுவிடாமல் அவர் அம்மாவையும் அழைத்து அடிக்குமாறு கூறியிருக்கிறார். இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி கரிஷ்மா கபூரை அடித்துள்ளதாக அவர் தற்போது செய்தியாளர்கள் மத்தியில் கூறிய தகவல்களை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.