“காலம் காலமாக துரத்தி அடிக்கும் கர்மவினை..!” – எளிதில் போக்கக்கூடிய பரிகாரங்கள்..!

இவர் அப்பா காலத்தில் மட்டுமல்ல தாத்தா காலத்திலும் தான் இப்படி இவர்கள் சிரமப்பட்டார்கள். காலம் காலமாக இந்த குடும்பம் இது போன்ற கர்மவினையால் அவதிப்பட்டு வந்து கொண்டு தான் இருக்கிறது என பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.

அப்படி அந்த குடும்பம் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக கர்ம வினையால் பாதிப்படைந்து அது சரியாகாமல் சிரமப்பட்டு இருந்தால் இந்த கட்டுரையை படித்து இதில் கூறி இருக்கும் பரிகாரங்களை செய்து நீங்கள் அதிலிருந்து வெளிவர முடியும்.

கர்ம வினையை நீக்கும் பரிகாரங்கள்

ஏழு ஜென்மங்களாக நாம் எடுத்து இருக்கின்ற பிறவி முதல் இந்த பிறவிவரை எதை தவறுதலாக செய்து மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தோமோ அந்த வினை கர்ம வினையாக தொடர்ந்து வரும். இந்த வினையை தீர்த்துக் கொள்ள தர்மம் செய்ய வேண்டும். அதனால் தான் தர்மம் செய்து கர்மத்தை குறைத்துக் கொள் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனவே கர்மவினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அவர்கள் குலதெய்வம் கோயிலில் ஒரு மணியை வாங்கி கட்டி வைத்து விடுங்கள். இந்த மணி எவ்வளவு நாட்கள் எவ்வளவு எல்லாம் உழைக்கிறதோ அந்த அளவுக்கு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கர்மவினையானது குறையும்.

கர்மவினையால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தில் வம்சவிருத்தி இருக்காது.திருமணம் நடக்காது அப்படி நடந்தாலும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். அப்படிபட்டவர்கள் ரோட்டோரத்தில் இருக்கக்கூடிய வண்டி கடை வைத்திருப்பவர்களுக்கு உங்கள் கையால் தராசை வாங்கி தானம் செய்யலாம் அல்லது வெயிலில் இருந்து வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய குடை வாங்கி கொடுக்கலாம் இதன் மூலம் உங்களது கர்மவினை குறையும்.

வருடத்திற்கு ஒருமுறையாவது கடலுக்குச் சென்று நீராடி குளிக்க வேண்டும். அதுபோல மலைக்கோவில்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை நீங்களே ஏறி சென்று கடவுளை தரிசனம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம் சென்று வருடத்தில் ஒருமுறை உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து திலக பூஜை செய்வதின் மூலம் கர்ம வினைகளிலிருந்து விடுதலை பெறலாம்.

மேற்குரிய இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து பாருங்கள். கட்டாயம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அப்படி நல்ல பலன் கிடைத்தால் அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …