அர்ஜுனன்.. கர்ணன்.. யார் பெரியவர்..? கல்கியால் வெடித்த சர்ச்சை..!

மகாபாரதத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக கருதப்படும் அர்ஜுனன் மற்றும் கர்ணன் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இந்த இரண்டு கேரக்டருமே அந்த கதை களத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் இதில் யார் பெரியவர் என்ற சர்ச்சையை தற்போது கிளம்பியுள்ளது.

இதற்கு காரணம் அண்மையில் திரை உலகில் வெளி வந்த கல்கி 2898   டி என்ற திரைப்படத்தில் வெளி வந்த காட்சிகளை வைத்து தற்போது இணையதள வாசிகள் சர்ச்சைகளை அதிகளவு கிளப்பிவிட்டார்கள்.

அர்ஜுனன் vs கர்ணன்.. 

இந்தப் படம் ஆரம்பத்தில் ப்ராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்ட நிலையில் கடைசியாக கல்கி 2898 ஏடி என்ற பெயரில் வெளி வந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் முதல் பாதி முழுவதும் பிரபாஸுக்கு கொடுத்துவிட்டு கடைசி கிளைமாக்ஸ் கர்ணனாக சந்தோஷ் நாராயணன் பி ஜி எம் மற்றும் வி எஃபெக்ட்ஸ் போட்டு பெரிய பில்டப் உடன் நாக் அஸ்வின் பொத்தி பொத்தி வைத்து காட்டிய சீனை எப்படி ஸ்பாயில் செய்து விட்டார்களே என பிரபாஸின் ரசிகர்கள் புலம்பித் தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் கல்கி அவதாரத்தை பற்றி சொல்ல வந்திருக்கிறார்களா? இது கல்கி திரைப்படமா? அல்லது கர்ணன் திரைப்படமா? என்ற கேள்விகள் வேகமாக எழுந்து ஒட்டு மொத்த படத்தின் கதையை மாற்றி விட்டார்களா? என்ற விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கூறி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து கர்ணன் பலம் வாய்ந்தவரா? அல்லது அர்ஜுனன் அதிக சக்தியுடையவரா? என்ற விவாதத்தை கிளப்ப கர்ணன் படத்தில் இருக்கும் பைரவா கதாபாத்திரத்தில் நடித்த பிரபாஸ் உண்மையிலேயே கர்ணன் என ரிவீல் செய்யப்படுவது தான்

ஆரம்ப நாட்களில் சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படத்தில் கர்ணன் ஒரு தேரோட்டியின் மகனாக தான் காட்டப்படுவார். அதன் மூலம் தான் அவருக்கு அவமானம் ஏற்பட்டது போல சித்தரித்து இருப்பார்கள்.

எனினும் இதைத் தாண்டி மகாபாரதம் சீரியலில் கர்ணன் யார் என்பதை ரசிகர்கள் தெளிவாகத் தெரிந்திருப்பார்கள். கர்ணனுக்கு தேர் என்றால் பைரவாவுக்கு கார் என்கிற ரேஞ்சில் இப்படி ஒரு காரை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் நாக் அஸ்வின்.

யார் பெரியவர்..

மேலும் சினிமாக்கள் மற்றும் சீரியல்களில் கர்ணன் பலவானாக காட்டப்பட்டு இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் உண்மையில் மகாபாரதத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்றால் கர்ணன் அர்ஜுனனை விட பெரியவன் இல்லை என்று வியாசர் எங்கேயும் சொல்லவில்லை.

மேலும் இந்த படத்தில் அர்ஜுனனாக விஜய் தேவரகொண்டா நடித்திருக்கிறார். எனினும் அவருக்கு அந்த வேடம் சரியாக பொருந்தவில்லை. ராம் சரண் தான் அதற்கு பிட்டாக இருந்திருப்பார் என்று ரசிகர்கள் பிரச்சனை செய்து வருகிறார்கள்.

அது அல்லாமல் கிருஷ்ணராக மகேஷ் பாபுவை நாக் அஸ்வின் அடுத்த பார்ட்டில் கொண்டு வந்திருக்க வேண்டும் என மகேஷ் பாபுவின் ரசிகர்களும் அடித்துக் கொள்கிறார்கள்.

கல்கியால் வெடித்த சர்ச்சை..

இதனை அடுத்து பலரும் கொடை வள்ளலாக கர்ணனை பேசி வருவதை நாக் அஸ்வின் தவறாக புரிந்து கொண்டு கல்கி படத்தில் கர்ணனை ஹீரோவாக்கி புராணத்தை சுதப்பிவிட்டார் என பலரும் கலவை ரீதியான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே வெளி வந்த ஆதிபுருஷ் படத்திலும் ராமாயணத்தை தவறாக சித்தரித்து இருப்பதை மேற்கோளாக காட்டி இருக்கக்கூடிய ரசிகர்கள் இது வெறும் சினிமா தான் கற்பனையால் ஒரு இதிகாசத்தை உருவாக்க நான் அஸ்வின் முயற்சித்திருக்கிறார் என்று கூறி விட்டார்கள்.

இதனை அடுத்து இப்படித் தான் இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டு அவர்கள் பாணியில் அவர்கள் செயல்களை செய்ய துவங்கி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version