ரகசியம் சொன்ன கார்த்தி.. பொதுவெளியில் போட்டு உடைத்த ஆர்யா.. அட கொடுமைய..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் கார்த்தி, ஆர்யா, விஷால் போன்றவர்கள். பள்ளி, கல்லூரி நண்பர்களை போல ஏறத்தாழ ஒத்த வயதுடைய நடிகர்கள் எல்லாமே, அவர்களுக்குள் வாடா போடா பிரண்ட்ஸ்தான்.

வாடா போடா பிரண்டஸ்

விஷால், ஆர்யா, கார்த்தி மூன்று பேருமே க்ளோஸ் பிரண்ட்ஸ். விஷால், ஆர்யா இருவருமே வாடா போடா பிரண்ட்ஸ் ஆக இருந்ததால், அவரவர் நடிக்கிற கதைகள் படங்கள் குறித்து கூட ஒருவருக்கு ஒருவர் சஜகமாக பேசிக்கொள்வர்.

அந்த வகையில், ஒரு இயக்குநர் ஒரு நடிகரிடம் கதை சொல்லி அதை ஏற்காவிட்டால் மற்ற ஒரு நடிகரிடம் அந்த கதையை சொல்வது வழக்கம்தான். அப்படி சொல்லும்போது சிலர் அதை ஏற்றுக்கொண்டு நடிப்பர். சிலர் மறுத்து விடுவர்.

கார்த்தி

அப்படிதான் இந்த சம்பவமும் சமீபத்தில் நடந்திருக்கிறது. ஒரு படத்தில் நடிகர் கார்த்தியை நடிக்க இயக்குநர் ஒருவர் கதை சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த கதையை கேட்டவுடனே கார்த்தி, இந்த கதை தேறாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

அதே இயக்குநர் நடிகர் ஆர்யாவிடம் சொல்லி, அவர் கதையை ஓகே சொல்லியிருக்கிறார். அதுகுறித்து கார்த்தியும், ஆர்யாவும் பேசிக்கொண்டதை ஒரு விழாவில் நடிகர் ஆர்யா போட்டுடைத்து விட்டார்.

ஆர்யா

நடிகர் ஆர்யா அந்த விழாவில் பேசியதாவது,

கார்த்தி பண்ண வேண்டிய ஒரு படம். என்கிட்ட ஸ்கிரிப் வந்தது. நான் வந்து அவரை ஒரு பங்ஷன்ல பார்க்கறேன். அப்போ அவர் என்கிட்ட வந்து, மச்சான், இந்த படம் பண்றயாமே நீ, அப்படீன்னு கேட்டார்.

இதையும் படியுங்கள்:  கொடைக்கானலில் இளம் நடிகருடன் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டேன்.. சரண்யா பொன்வண்ணன் கதறல்..

அப்போ நான் மனசுக்குள்ள பீல் பண்ணிட்டேன். பையன் ரொம்ப மிஸ் பண்றான் போல இருக்கு. அதனால்தான் நம்மை கேட்கிறான் அப்படீன்னு நெனைச்சேன்.

எனக்கு செட் ஆகலைடா

ஆமாண்டா மச்சான், நீ ஏண்டா பண்ணலே அப்படீன்னு கேட்டேன். இல்லடா அந்த கேரக்டர் கொஞ்சம் எனக்கு செட் ஆகலை டா. அப்படீன்னு இப்படீன்னு சொல்ல, ஓகே ஓகே டான்னு சொல்லிட்டேன்.

இதையும் படியுங்கள்:  41 நாட்கள் நடந்த கொடுமை.. ரகசியம் உடைத்த திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன்..

அப்புறம் போகும் போது, அப்புறம் மச்சான் அந்த கேரக்டர் பார்த்து பண்ணுடா அப்படீன்னான். இவன் இதுக்கு இப்படி பார்த்து பண்றான்னு சொல்றான்னு எனக்கு அர்த்தமே புரியலை. சரிடான்னு சொல்லிட்டேன். அப்புறம் அந்த படம் ரிலீஸ் ஆகி வந்தததுக்கு அப்புறம்தான் அது ஏன்னு புரிஞ்சது.

சென்ஸ் ஆப் ஜட்ஸ்மென்ட்

அதில் இருந்து எவனாச்சும் கால்ஷீட் சொல்லிட்டு ஸ்கிரிப்ட் எடுத்துட்டு வந்தான்னா அந்த படமே பண்றது இல்லை. அந்தளவுக்கு சென்ஸ் ஆப் ஜட்ஜ்மென்ட் கார்த்தி கிட்ட இருக்கு, என்று பேசியிருக்கிறார் நடிகர் ஆர்யா.

இப்படி ரகசியமாக கார்த்தி சொன்னதை பொதுவெளியில் போட்டு உடைத்த ஆர்யாவை பார்த்து, கார்த்தி .. அட கொடுமைய..என நொந்து போய் விட்டாராம்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version