கோடி ரூபாய் குடுத்தாலும் அந்த காட்சியில் நடிக்கவே மாட்டேன்.. நடிகர் கார்த்தி ஓப்பன் டாக்..!

நடிகர் கார்த்தி வாரிசு நடிகரான சிவகுமாரின் இளைய மகன் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

இவர் சூர்யாவின் தம்பி என்பது பலருக்கும் நன்றாக தெரியும், தென்னிந்திய பிலிம் பேர் விருதுகள், எடிசன் விருதுகள் தமிழக அரசின் திரைப்பட விருதுகள் போன்றவற்றை வென்று இருக்கிறார்.

நடிகர் கார்த்தி..

மேலும் நடிகர் கார்த்தியின் நடிப்பை ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் போன்ற படங்களில் நீங்கள் பார்த்து ரசித்திருக்கலாம். அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.

இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த ஜப்பான் திரைப்படம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை தரவில்லை. எனினும் அடுத்தடுத்த படங்களில் தற்போது அதிக கவனம் எடுத்து நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: எது குதிரைன்னே தெரியலையே.. Zoom பண்ணி பாத்தவன் கைய தூக்கிடு.. தூக்கலான கவர்ச்சியில் ஜனனி அய்யர்..!

இவர் தனது அண்ணனை போல் காதல் திருமணம் செய்து கொள்ளாமல் ரஞ்சனி என்ற தூரத்து உறவு பெண்ணை கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் ஜூலை மூன்றாம் தேதி 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு உமையாள் என்ற ஒரு மகள் இருக்கிறார்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்..

இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த நடிகர் கார்த்தி தனது படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை சுமார் 40 படங்களில் நடித்திருப்பார். ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பு மெருகேறி உள்ளது என சொல்லலாம்.

இவர் நடித்த படங்கள் பலவற்றிலும் இவர் ஒரு காட்சியில் கூட சிகரெட் பிடித்தது போல நடித்ததில்லை. அவ்வாறு சிகரெட் பிடித்து நடிப்பதை பார்த்தால் அவரது ரசிகர்கள் அதை தொடர்ந்து ஃபாலோ செய்வார்கள் என்ற நல்ல எண்ணத்தில் இன்று போன்ற காட்சிகளை நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

கார்த்தி ஓப்பன் டாக்..

கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த காட்சிகள் நடிக்க மாட்டேன் என்று நடிகர் கார்த்தி ஓப்பனாக கூறி இருக்கக்கூடிய விஷயம் தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு நடிகர் கார்த்தியின் நல்ல எண்ணத்தை பலரும் புரிந்து கொண்டு அவரை பாராட்டி இருக்கிறார்கள்.

காசுக்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருந்து மாறுபட்டு ரசிகர்களின் நலனை நினைக்கக்கூடிய வகையில் இவர் செயல்பட்டு இருப்பது பலர் மத்தியிலும் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அப்பா யாருன்னு தெரியாது.. நாகர்ஜுனாவால் 10 ஆண்டு கொடுமை.. போலீஸில் சிக்கிய தபு பற்றி தெரியுமா..?

எனவே இது போல பிரபலங்களாக இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சமுதாய நலனில் அக்கறை கொண்டு நல்லவற்றை வெளிப்படுத்தும் போது ரசிகர்களுக்கு நன்மை ஏற்படும்.

அதை விடுத்து பணத்துக்காக தேவையில்லாத விளம்பரங்களில் நடித்து சமுதாயத்தில் இருக்கும் மக்களை சீரழிக்காமல் இருக்க முயற்சி செய்யலாமே. இந்த விஷயம் தான் தற்போது இணையங்களில் வேகமாக பரவி கார்த்தியின் நல்ல எண்ணத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version