நம்ம குடும்பத்துக்கு இந்த சாவகாசம் வேணாம்பா.. கார்த்தி செஞ்ச வேலையை பாத்தீங்களா..?

சினிமாவில் நடித்து ஜெயித்து முன்னிலைக்கு வருவது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் அடைந்த இடத்தை தவற விடாமல் எப்போதும் தக்க வைத்துக்கொள்வது, அதே இடத்தில் கடைசி வரை நிலையாக நீடித்திருப்பது.

இப்போதும் சூப்பர் ஸ்டார் இடத்தை ரஜினிகாந்த் தக்க வைத்துக்கொண்டு இருக்க காரணம், அவரது தொழில் கவனமும், 73 வயதிலும் அயராத உழைப்பும்தான்.

ஆனால் நல்ல நடிகர்களாக மக்கள் மத்தியில் பெயர் வாங்கி விடும் நடிகர்கள், அதன்பிறகு தொடர்ந்து சொதப்பினால், அந்த ஆண்டவனாலும் அவர்களை காப்பாற்ற முடியாது என்ற ரஜினியின் டயலாக்தான் நிஜமாகும்.

கார்த்தி

நடிகர் கார்த்தியை, சிவக்குமார் மகன் என்ற அடையாளத்தை தாண்டி முதல் படத்திலேயே மிகப்பெரிய சண்டியராக காட்டி, பிரமிக்க வைத்தவர் டைரக்டர் அமீர்.

சாதித்து காட்டிய அமீர்

அமெரிக்காவில் படித்துவிட்டு திரும்பிய நவநாகரிக இளைஞனை ஒரு பட்டிக்காட்டு சண்டியராக நடை உடை பாவனைகளில் மாற்றி, அப்படியே தத்ரூபமாக கொண்டு வருவது என்பது அசாத்திய துணிச்சல்தான். அதை கார்த்தி நடித்த முதல் படமான பருத்திவீரனில் சாதித்துக் காட்டினார் இயக்குனர் அமீர்.

இதையும் படியுங்கள்: ஒரே ஒரு முடிச்சு தான்.. குட்டியூண்டு உடையில் ஈஸ்டர் கொண்டாடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

என்ன மாமா சவுக்கியமா

இதுவரை 25 படங்களில் நடித்திருந்தாலும் கார்த்தி எங்கு சென்றாலும், மேடை ஏறி பேசினாலும் என்ன மாமா சவுக்கியமா என்று பருத்திவீரன் ஸ்டைலில் பேசிதான் கைதட்டல் வாங்குகிறார் என்றால், இன்னும் அவரது அந்த நடிப்பை தான் ரசிகர்கள் விரும்பி ரசிக்கின்றனர்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்த நடிகர் கார்த்திக்கு அவரது 25வது படம், மிக மோசமான பிளாப் படமாக அமைந்தது. இதற்கும் குக்கூ, ஜோக்கர் போன்ற மிகச்சிறந்த படங்களை தந்த இயக்குனர் ராஜூ முருகன்தான் டைரக்ட் செய்தார்.

கார்த்தியின் தலையீடு

படத்தில் நடிகர் கார்த்தியின் தலையீடு அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த படம் டைரக்டர் கைவசமே இல்லை. அதுதான் படத்தின் மிக மோசமான தோல்விக்கு காரணம் என, சமீபத்தில் அந்த படத்தில் நடித்த பவா செல்லத்துரை கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்போது நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்திலும் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அத்துடன் கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த சர்தார் 2 படத்தின் துவக்க விழாவும் நடந்தது. இதையடுத்து மற்றொரு புதிய படத்திலும் நடிகர் கார்த்தி நடிக்கிற தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதையும் படியுங்கள்: Zooom பண்ணி பாத்தவங்க கையை தூக்கி.. உள்ளே ஒண்ணுமே போடாமல்.. சல்லடை உடையில் சமீரா ரெட்டி..!

சந்தீப் வங்கா ரெட்டி

அர்ஜூன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சர்ச்சையான இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது வேறு ஒரு படத்துக்காக பணிசெய்துவரும் சந்தீப் வங்கா ரெட்டி, அந்த படத்தை முடித்த பிறகு, கார்த்தி படத்தை இயக்கப் போவதாக அவரே ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அனிமல் சர்ச்சை

அனிமல் படம் மிகப்பெரிய விமர்சனத்துக்கும் சர்ச்சையிலும் சிக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் அந்த படத்தை கழுவி ஊற்றிய நிலையில், அந்த படத்தின் இயக்குனர் படத்தில் கார்த்தி நடிப்பதாக வந்த தகவலால் ரசிகர்கள் எரிச்சலில் உள்ளனர்.

சாவகாசம் வேணாம்பா…

நம்ம குடும்பத்துக்கு இந்த சாவகாசம் வேணாம்பா என்று, கார்த்தி செஞ்ச இந்த வேலையை பாத்த பிறகாவது, அவரது அப்பா சிவக்குமார் சொல்லக் கூடாதா என்றும் புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version