சக்க போடு… ரிலீஸ் க்கு முன்பே தொடங்கியாச்சு …கார்த்திக் பட வசூல் வேட்டை…!

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி  தனக்கென தனி இடத்தை திரையுலகிலும்,மக்கள் மனதில் பிடிப்பவர் வெகு சிலரே.அப்படி வாரிசு நடிகராக அறிமுகமாகி சிறந்த முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் கார்த்திக் சிவக்குமார்.

கார்த்திக் அவர்களின் தந்தை பழம்பெரும் நடிகர் திரைத்துறையின் முன்னணி ஜாம்பவான்களான சிவாஜி கணேசன் முதல் பிற்கால நாயகர்களான அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற அனைத்து நாயகர்களுடனும் நடித்துள்ளார்.

கார்த்திக் அவர்கள் என் அண்ணனும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனுமான சூர்யாவும் முன்னணி நடிகர்களுள் ஒருவர்.கார்த்திக் முதலில் மணிரத்தினம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பின்பு பருத்திவீரன் என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் அவர்கள் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார் .பின்பு பையா, நான் மகான் அல்ல, தோழா, சிறுத்தை, மெட்ராஸ் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

பருத்திவீரன் திரைப்படத்தில் இவர் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது மேலும் விமர்சன ரீதியிலாகவும் நல்ல வரவேற்பை படம் பெற்றது. இவர் அறிமுகமான படத்திலிருந்து மிகச்சிறந்த நடிகராகவும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடிகராகவும் மாறினார்.

தற்போது இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலில் இத்திரைப்படம் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

வெளியான பின்பு இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்திருந்தாலும். கார்த்திக்கின் நடிப்பில் வெளிவர உள்ள சர்தார் திரைப்படம் Digital, Satellite, டப்பிங், ஒவர்சீஸ் உள்ளிட்ட விஷயங்களை சேர்த்து ரூ. 64.6 கோடிக்கு விற்பனையாகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி.

மேலும் இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, முரளி சர்மா மற்றும் முனிஷ்காந்த் போன்றோர் நடித்துள்ளனர்.

ஹிந்தி நடிகரான முனீஸ்கான் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் மேலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு லைலா திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

ரிலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்ததும் புதுமுக நாயகர் மற்றும் லைலாவின் வருகையால் இத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …