நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த தீபாவளி போனஸ் படமான சர்தார் வசூல் பற்றி பார்க்கலாமா?

 நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் மிக வித்தியாசமான லுக்கில் உருவாக்கப்பட்ட இந்த சர்தார் திரைப்படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படமானது  அக்டோபர் 21ஆம் தேதி வெளியானது.

 திரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் வெளிவரும் என்று முதல் படத்தின் சக்சஸ் மேட்டில் அறிவித்திருந்தார்கள். இதை எடுத்து ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

 ஏற்கனவே மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படம் அபரிமிதமான வசூலை வாரி குவித்து விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்த நிலையில் இந்த சர்தார் படத்தின் வசூல் எவ்வளவு என்பதை  தெரிந்து கொள்ள வேண்டுமா?

 தீபாவளி பண்டிகை அன்று வெளிவந்த இந்த சர்தார் படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 70 கோடியை நெருங்கி விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்த படம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் படத்தை பின்னுக்கு தள்ளி வசூல் வேட்டையில் இறங்கி உள்ளதால் கார்த்தியின் ரசிகர்கள் மட்டுமல்ல படகுழு மிகவும் சந்தோஷத்தில் உள்ளது.

 இன்னும் சில நாட்கள் இந்தப் படம் தொடர்ந்து ஓடும்போது சுமார் 100 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் தெரிவித்துள்ள நிலையில் கார்த்தி அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நாயகர்களின் வரிசையில் முன்னேறி வருகிறார்.

இதை எடுத்து பல படங்களில் தொடர்ந்து நடிப்பதற்காக  இருக்கும் கார்த்தி மேலும் மேலும் தனது அண்ணன் சூர்யாவை விட முன்னுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

 மேலும் சில ரசிகர்கள் திடீரென கார்த்தி இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம் பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவனாக வந்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டதோடு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது தான் என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசிக்கொள்கிறார்கள்.

 எது எப்படியோ இப்போது கார்த்தியின் காட்டில் நல்ல மழை என்று சொல்லும் அளவுக்கு அதிக அளவு படங்களில் நடிப்பதற்காக அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …